செவ்வாய், 3 செப்டம்பர், 2024
ஞாயிறு, 1 செப்டம்பர், 2024
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் கிளை செயற்குழுக்கூட்டம் 31.08.2024
சனி, 17 ஆகஸ்ட், 2024
வியாழன், 15 ஆகஸ்ட், 2024
ஆசிரியர் இனக்காவலர் நினைவில்வாழும் பாவலர் திரு.க.மீ.,அவர்களின் 15.08.2024 ,ஆம்நாள் பிறந்த நாள். அணைக்கும் கரங்கள் இல்லத்தில் இரவு உணவு வழங்கியது இராசிபுரம் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
ஆசிரியர் இனக்காவலர்
நினைவில்வாழும் பாவலர் திரு.க.மீ.,அவர்களின் 15.08.2024 ,ஆம்நாள்
பிறந்த நாள்.
அணைக்கும் கரங்கள் இல்லத்தில்
இரவு உணவு வழங்கியது
இராசிபுரம் ஒன்றிய
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
பாவலர் புகழ் வாழ்க!
*************************
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இராசிபுரம் ஒன்றிய அமைப்பின் சார்பில்
இராசிபுரம்
அணைக்கும் கரங்கள் இல்லத்தில்
வாழும் சுமார் 100 க்கும் மேற்பட்டோருக்கு
ரூ 8500/ மதிப்பில்
இரவு உணவு
இயக்க நிறுவனர்-பாவலர் திரு.க.மீ ,ஐயா அவர்களின் 15.08.2024 ஆம்நாள்
பிறந்தநாளில்
வழங்கப்பட்டது.
இராசிபுரம் அணைக்கும் கரங்கள் இல்லத்தில்
பாவலர் ஐயா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தி பாவலரின் சேவைகள் நினைவுகூறப்பட்டது.
இராசிபுரம் ஒன்றியப்
பொறுப்பாளர்கள்
ஆண்டுதோறும்
பாவலர் ஐயா அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில்
அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உணவு வழங்குதல் செய்து வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.
தேவையானவருக்கு வாய்ப்புள்ள போது
அண்ணம் இடுதலும்,
ஏழை எளிய குழந்தைகளின் கல்விப்பசி போக்கும் கற்பித்தலும்,
உழைப்பிற்கேற்ற உரிமைக்கு
குரல் கொடுத்தலும் ,
இனத்தின் கண்ணியமிகு வாழ்விற்கு சலிப்பின்றி போராடுதலும்
நாடும் மொழியும் நமதிருகண்கள்
என்று பேணுதலும்
பாவலர் ஐயா அவர்களின் வழிவந்த
இயக்கப்பணிகளாகும்!
இந்நாளில் இத்தகு உறுதிமொழி ஏற்று செயலாற்றுவதே
பாவலர் புகழ் வளர்க்கும்
நற்செயலாகும்!
-முருகசெல்வராசன்