வெள்ளி, 1 டிசம்பர், 2017
ரயில் வரும் நேரத்தை அறிய ஜி.பி.எஸ்!!!
ரயில் வரும் நேரத்தைத் துல்லியமாக அறிய எஞ்சினில் ஜி.பி.எஸ். கருவி அடுத்த ஆண்டு பொருத்தப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக தூரம் பயணம் செய்வதற்கு மக்கள் ரயில் போக்குவரத்தையே நம்பியிருக்கின்றனர். ஆனால் ரயில் பல சமயங்களில் சரியான நேரத்திற்கு வருவதில்லை. ரயில் நிலையத்திற்கு ரயில் எப்போது வரும் என்பது பயணிகளுக்குச் சரியாகத் தெரிவதில்லை.
இந்நிலையில், இதற்கான புதிய தொழில்நுட்பத்தை ரயில்வே துறையினர் அமல்படுத்தவுள்ளனர். Real-time Punctuality Monitoring and Analysis என்ற முறை அறிமுகமாக உள்ளது. அதன்படி ஜி.பி.எஸ். கருவியானது ரயிலில் என்ஜினில் பொருத்தப்படும். அதனோடு பொருத்தப்படும் ரியல் டைம் கருவியால் ரயில் ஒரு குறிப்பிட்ட நிலையத்துக்கு வரும் நேரம் துல்லியமாகப் பயணிகளுக்குத் தெரிய வரும்.
இந்த முறையானது அடுத்த ஆண்டு முதல் டெல்லி-ஹவுரா மற்றும் டெல்லி-மும்பை வழித்தடங்களில் செல்லும் ரெயில்களில் நடைமுறைப் படுத்தப்படும். அதன் பின்னர் நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
புதிய கருவியானது உத்தரப் பிரதேசம் மாநிலம் முகல்சாரை ரயில் நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த முறையைப் பயன்படுத்தி ஓட்டுநர் ரயிலை வேகமாக ஓட்டினாலோ, தாமதமாகப் புறப்பட்டாலோ, அவசியமில்லாத இடங்களில் நின்றாலோ அல்லது சிக்னலில் நின்றாலோ எளிதாகக் கண்டறிய முடியும் என்று இது குறித்து முகல்சாரை ரயில்வே மேலாளர் கிஷோர் குமார் கூறினார்.
புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்?
வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள புயலுக்கு 'ஒகி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயலுக்கு வங்கதேசம் பெயர் வழங்கியுள்ளது.
வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும்ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953-ல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இந்தியப் பெருங்கடலில்...
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.
புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
DIARY~ DECEMBER 2017…
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது...
📗3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,
📗5.12.17- உலக மண் தினம்,
📗9.12.17- குறை தீர்க்கும் நாள்,
📗11.12.17- உலக மலைகள் தினம்,
📗18.12.17- முதல் 23.12.17 வரை,இரண்டாம் பருவத் தேர்வு ...
📗24.12.17 முதல் 1.1.18 வரை - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை...
📗2.1.18- இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து மீண்டும் பள்ளி திறப்பு.
வியாழன், 30 நவம்பர், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)