ஞாயிறு, 10 டிசம்பர், 2017
வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அப்ளிகேஷன்!
ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அப்டேட், வணிகம் செய்யும் நபர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் பயனர்களைக் கவர முயற்சி செய்யும் பல நிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் வாட்ஸ்அப்பிலும் புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் பிஸினஸ் என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றினை இதற்காக அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உண்மையான, நம்பகத்தன்மை கொண்ட விற்பனையாளர்களைப் பயனர்கள் கண்டறிந்து கொள்ளலாம். இதில் வணிகம் செய்யும் நபர் முதலில் முழு விவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் பதிவிட வேண்டும். வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களின் தகவல்களைச் சோதனை செய்து, உண்மையான தகவல்கள் எனில் அவர்களுக்குப் பச்சை வண்ண டிக் மூலம் அங்கீகாரம் வழங்குகிறது.
பொருள்களை வாங்க முயற்சி செய்யும் பயனர்கள் இதைப் பார்த்து அவர்கள் நம்பகத்தன்மை உடையவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். பச்சை வண்ணத்தில் டிக் இல்லாத வணிகக் கணக்குகள் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை என்றும் பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனைத் தற்போது சோதனை ஓட்டமாகச் செயல்படுத்தி வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம். இதன் வெளியீடு விரைவில் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அப்ளிகேஷனில் பழைய வாட்ஸ்அப்பில் உள்ள கால் சிம்பல் நீக்கப்பட்டுப் புதிதாக B என்ற சிம்பல் இணைக்கப்பட்டுள்ளது.
சனி, 9 டிசம்பர், 2017
STATE TEAM VISIT ~Instructions...
1. தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை:
வருகை பதிவேடு
AEEO.,BRTE,SUPERVISOR,VISIT NOTE,Time table,Action plan,Assesment Register,
வெற்றியின் விழுதுகள் , துளிரின் தொடக்கம், STEP INTO ENGLISH, PHONETICS BOOKS .
SG ,MG செலவினம் தெளிவாக கூற வேண்டும்
அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்க பட்டிருக்க வேண்டும்
EER ,SMC பதிவேடு updatedவேண்டும்
2.பள்ளி வளாகம்,கழிப்பறை தூய்மை, water tank ,Toilet சுத்தமாகவும் தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.
3.கரும்பலகையில் நாள்,தேதி,வருகை,பதிவு எழுதி இருக்க வேண்டும்
4. SABL-ஆரோக்ய சக்கரம் காலநிலை, அட்டவணை,கீழ்மட்ட கரும்பலகை , TRAY,பாய்,KITBOX,புத்தக பூங்கொத்து, action plan assesment note , CCE records இருக்க வேண்டும்
5.periodical assesment results assessment registerல் ஒட்ட வேண்டும்
6.CAL CENTRE பள்ளிகளில் CAL time table ,syllabus மற்றும் கணினிகள் சுத்தமாக இருக்க வேண்டும் .
7.periodical test பற்றி அனைத்து ஆசிரியர் களும் தெரிந்து இருக்க வேண்டும்.
8.TV, DVD, CD பயன்பாடு இருக்க வேண்டும் .
9.மதிய உணவு Hand washing solution இருக்க வேண்டும்.
10. C,D மாணவர் களுக்கான செயல் திட்டம்/test papers / பதிவேடுகள்
11.SALM,ALM- MIND MAP,தொகுத்தல் ALM படிநிலைகள் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.
12.Class work note,home work,composition note ,Test note , two ruled , four ruled திருத்தம் செய்து இருக்க வேண்டும் .
13.SLm kit box ,Science kitbox பயன்பாட்டில் இருக்க வேண்டும். மாணவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துவது என தெரிந்து இருக்க வேண்டும்.
14.TLM PROJECT WORKS
FA (a ) ,FA (b) ,files ,port folios காட்சி படுத்த வேண்டும்.
15.ICT வகுப்பறைக்கள் பாராட்டுக்குரியவை.
16. சிறப்பான நிகழ்வுகள்:
மாணவர் சேர்க்கை அதிகரிக்க எடுத்த முயற்சிகள்,மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ,
பள்ளியில் செயல்படுத்தி வரும் புதுமைகள்மற்றும் செயல்பாடுகளை பார்வை அதிகாரிகளிடம் முன்னிலைப்படுத்தலாம்.
ஆதாருடனான~ அனைத்துவகையான இணைப்புகள்(LINKS)...
*Aadhaar Update Link*
*Link Aadhaar & Pan*
*Link Aadhaar To Lic Policy*
*Link Aadhaar With Indane Gas*
*Link Aadhaar With HP Gas*
*Link Aadhaar With Bharat Gas*
*Link Aadhaar To SBI Bank*
*Link Aadhaar To Indian Bank*
*Aadhaar Official Website*
*Link To Download Aadhaar Card*
*Official Notice To Link Aadhaar With Mobile Networks*
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1
*Link Aadhaar With Airtel Mobile Number*
*Link Aadhaar With India Post*
ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்(8/12/17)...
ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் மதுரை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டதிற்கு ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பார்கள் மோசஸ, சுப்ரமணியன், சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்கள்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரிய நிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்.
2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக அரசு ஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய அனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 2 1 - 12-17 அன்று முறையீடு செய்வது.
3. ஓய்வூதியம் பாதுகாப்போம்மற்றும் உரிமைகள் மீட்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் திருச்சியில் 31.12 .17. அன்று ஜாக் டோ - ஜியோ சார்பாக நடத்துவது.
4.அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான...
(1) புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்தல் பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்தல்,
( 2) 21 மாத ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்,
(3)சத்துணவு,அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர், பகுதி நேரம்/தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிடோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
(4)இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள்,உயர்நிலை/மேல்நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல்,
(5)குறைந்தபட்ச ஊதியம் 18000/- வழங்குதல்,
(6) பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துதல்,
(7) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்தல்,
(8) குறைந்தபட்ச ஓய்வூதியதியம் ரூ.9000/_ வழங்குதல் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை டிசம்பர் 2017க்குள் நிறைவேற்றவில்லை என்றால் 2018 ஜனவரி 4வது வாரத்தில் இருந்து சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் . மாயவன்,மீனாட்சி சுந்தரம்,முத்துசாமி,அன்பரசு,வெங்கடேசன்,தாமோதரன்,தாஸ், செய்தித்தொடர்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)