நாமக்கல் மாவட்ட ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் இன்று (21/12/17) பிற்பகல் 03.00 மணியளவில் நாமக்கல் மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளர் அவர்களை சந்தித்து
ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை மனுவை அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இம்மனுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இச்சந்திப்பு நிகழ்வில் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன், மாநில விதிமுறைக்குழு உறுப்பினர் திரு.இராஜேந்திரன், மாநில தீர்ப்புக்குழு உறுப்பினர் திரு.பன்னீர்செல்வம், புதுச்சத்திரம் ஒன்றியத் தலைவர் திரு.பன்னீர்செல்வம், செயலாளர் திரு.கதிரேசன் , கபிலர்மலை செயலாளர் திரு.சங்கர் மற்றும் நாமகிரிப்பேட்டை செயலாளர் திரு.மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.