நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள்
(12.01.18-வெள்ளி)பிற்பகல் 03.30மணியளவில் சந்தித்து தமிழ்புத்தாண்டு மற்றும் இனிய
தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இச்சந்திப்பில் முதன்மைக்கல்வி அலுவலர் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டார்.
இச்சந்திப்பில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய முதன்மைக்கல்வி அலுவலர் கல்வியில்,பள்ளியில் நம்முன் உள்ள சவால்களை அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம்;கடமையாற்றுங்கள்
என அன்புடன் கேட்டுக்கொண்டார்.
பெண் பொறுப்பாளர்களிடம் தனித்து உரையாற்றிய முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்ககு ஊக்கம்தரும் வகையிலான ஆலோசனைகளை வழங்கினார்.
இச்சந்திப்பு வரும் நாட்களில் மகிழ்வுடன் கற்றல்-கற்பித்தல் பள்ளிகளில் நடைபெறும் எனும் நம்பிக்கை அளித்துள்ளது.
இச்சந்திப்பின் பொழுது யாழ்ப்பாணம் மற்றும் மலேயா நூலகத்திற்கு ஒன்றியம் வாரியாக அன்பளிப்பு நூல்கள் முதற்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பலநூற்றுக்கணக்கில் நூல்கள் திரட்டி அளிப்பதென உறுதி ஏற்கப்பட்டுள்ளது.