சனி, 27 ஜனவரி, 2018

போலியோ சொட்டு மருந்து முகாம்-நடைபெறும் இரு நாட்களிலும் ஒத்துழைப்பு நல்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்ட கிளையின் ஒன்றிய செயலாளர்கள் கூட்டம்(27.01.2018) -இராசிபுரம் ~நிகழ்வுகள்...

SBI - பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் பணிக்கு நேரடி ஆட்சேர்ப்பு...


*காலி 
இடங்கள்: 8301

*தகுதி: Degree

*சம்பளம்: Rs. 31450/-

*ஆரம்ப தேதி:20.01.2018

*கடைசி தேதி:10.02.2018

*விண்ணப்பிக்கும் முறை: Online

For more click here:


கூகுளின் நவீன தொழில்நுட்பம்!


ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம்
தகவல் பரிமாற்றம் செய்ய புதிய செயற்கை நுண்ணறிவு கொண்ட மெசேஜ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஓ.எஸ்.கள் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அதில் அவ்வப்போது புதுமையான அப்டேட்களை வெளியிடும் கூகுள் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பயனர்களின் மெசேஜ்களுக்கு எளிதில் பதில் கூறும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது.

கூகுள் Allo என அழைக்கப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பமானது பயனர்களின் வழக்கமான, அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பதிவிட்டுக்கொள்கிறது. மெசேஜ் வரும்பொழுது அதனை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் பயனரின் பதிலை, அவர் டைப் செய்வதற்கு முன்னரே எடுத்துக் கொடுக்கிறது. இந்த வசதியைப் பயனர்கள் உபயோகிக்கும்பொழுது பெரும்பாலும் டைப் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. அதற்குத் தகுந்த வார்த்தைகளை allo தொழில்நுட்பம் காண்பிக்கும். அதில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்தால் போதுமானது.

தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் தொழில்நுட்பமாம் இன்னும் அதிகாரபூர்வமாக அனைத்துப் பயனர்களுக்கும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 26 ஜனவரி, 2018

4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்...


தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தலா ரூ.2 லட்சத்தில்...: 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக கிராமப்புறங்களில் 3,000 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டேப்லட் , கணினி, இணையதள இணைப்பு வசதிகள் இருக்கும். ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும்.

'இன்டர்நெட்' இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவை உடையதாக இருக்கும். ஸ்மார்ட் வகுப்பறையைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தங்களின் ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற...

தங்களின், ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற பின்வரும்
இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் TPF கணக்கு எண் & பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். 

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு PTPF-ம் 
CPS தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்.

Pay Slip

தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும். 

Annual income statement

இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும். 

ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது. 

எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம். 


ஊதிய அலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே  நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும். 

உண்மைத் தன்மை - இனி CEO அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்...

வருமான வரி பிடித்தம் 80c= 150000(Savings) மற்றும் 80ccd(1)B= 50000 (CPS amount) முதன்மை ஆணையர் இந்திய வருமான வரித்துறை அவர்களின் தெளிவுரை....

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ கபிலர்மலை ஒன்றியம் - ஒன்றிய செயற்குழுக் கூட்டம் (25/01/2018)~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ 
கபிலர்மலை ஒன்றியம் (கிளை).

ஒன்றிய செயற்குழுக் கூட்டம்...

இடம்:
 மன்றம் அலுவலகம்,  வெங்கமேடு (வேலூர்).

நாள்:  (25/01/2018 ) மாலை 6 மணியளவில்...