உயர்கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சோதனை முயற்சியாக 2019ம் கல்வியாண்டு முதல் இத்தகைய சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை ஐஐடி., டில்லி பல்கலை., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது.
நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளது. இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், இந்தியாவை இணைக்கும் சங்கிலியாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது சிக்கலாக இருக்காது. கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.