மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்(RMSA) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவை ஒருங்கிணைக்கப்பட்டு, SSAS (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை SSA, 9-10ம் வகுப்பில் RMSA திட்டம் செயல்படுகின்றன.
இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.
இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.