செவ்வாய், 10 ஏப்ரல், 2018
கையடக்க கணினியில் தேர்வு எழுதி ஆச்சரியப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்...
அரசு பள்ளி மாணவர்களின் திறமையினை வளர்க்கும் வகையில் கையடக்க கணினி மூலம் தேர்வு எழுதும் முன்னோடி திட்டம் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக பள்ளிகளில் பயிற்றுவிக்கும் முறை மற்றும் பயிலும் முறையில் பல்வேறு மாறுதல்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் புத்தகங்கள் இன்றி கையடக்க கணினி (டேப்) மூலம் பாடங்களை பதிவேற்றி அவற்றின் மூலம் கற்பதுடன் தேர்வு எழுதும் முறையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1 முதல் 3 வரையில் உள்ள வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகள் கையடக்க கருவி மூலம் தேர்வு எழுதினர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில் ''அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முன்னோட்ட திட்டமாக கையடக்க கணினி மூலம் பாடம் பயிலும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் உள்ள பாடங்களை க்யூ.ஆர் குறியீடு மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் கையடக்க கணிணியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களில் இருந்து 20 மதிப்பெண்களுக்கான தேர்வினை மாணவ மாணவிகள் இந்த கையடக்க கணினி மூலம் எழுதுகின்றனர். இன்று துவங்கிய தமிழ் தேர்வு உள்ளிட்ட அனைத்து பாட தேர்வுகளையும் கையடக்க கணினியில் எழுத உள்ளனர்'' என்றார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசு எடுத்து வரும் இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
திங்கள், 9 ஏப்ரல், 2018
பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி~ ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி…
பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள், செய்முறை விளக்கங்களை, மாணவர்கள் அறியும் வகையில், இணையதள பிளாக் செயலி குறித்த தகவல்கள் புதிய புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
சமச்சீர் பாடத்திட்ட அடிப்படையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கின்றன.
வண்ண படங்கள்:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையானதாக, புதிய பாடத்திட்ட கருத்துக்கள் இடம்பெறும் என, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.
இதில், தமிழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்வர். புத்தகத்தை தாண்டி, மாணவர்கள் சிந்திக்கவும், தகவல்களை பெறவும், இம்முறை உதவும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
பாடத்திட்டக் குழு ஆசிரியர்கள் கூறியதாவது:
ஒருங்கிணைந்த கணினி வழி கல்விக்கென, ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நிறைய செயல்திட்டங்கள் வடிவமைத்து, கல்வித்துறை இணையதளம், செயலி உருவாக்கி, பதிவேற்றம் செய்து வருகிறோம். இதை, ஆசிரியர்கள் மட்டுமே, பார்வையிட்டு வந்தனர்.
புதிய பாடத் திட்ட புத்தகங்கள் மே இறுதியில் வெளியிடப்படும்...
புதிய பாடத் திட்டப்படி தயாரிக்கப்படும் புத்தகங்கள் மே இறுதியில் வெளியிடப்படும் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.
இதுகுறித்துதூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையும் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசின் 29 போட்டித் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கும் வகையில் சென்னை, கோவை, திருச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட 9 மையங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் கல்வியாண்டில் மத்திய கல்வி வாரிய பாடத் திட்டத்தை (சிபிஎஸ்இ) விஞ்சும் வகையில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.மே மாத இறுதியில் இதற்கான புத்தகம் வெளியிடப்படும். அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும்.
புதிய பாடத் திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களை தயார்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேருக்கு கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்பாக பயிற்சி அளிக்கப்படும். தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கும் திட்டம் உள்ளது என்றார்.
ஞாயிறு, 8 ஏப்ரல், 2018
ISRO - ISCOPE SUMMER COURSE-2018 REGISTRATION FOR SUMMER COURSE...
என் அருமை ஆசிரிய நண்பர்களுக்கும் மாணவ செல்வங்களுக்கும் பாலமோகன் ராமசாமியின் வணக்கங்கள்...
வரும் 15-04-2018 முதல் துவங்கி 14-05-2018 வரை 30 நாட்களுக்கு ஒரு மாத கால சான்றிதழ் பயிற்சி ISRO -ISCOPE Program சார்பில் ஆன்லைன் கோடை கால படிப்பு தமிழ் வழியில் நடைபெற உள்ளது.
இது முற்றிலும் ஒரு .புதுமையான, முயற்சி கட்செவி, முகநூல், மின் அஞ்சல் மூலம் மட்டுமே இந்த பயிற்சி நடைபெறும்.
ஏற்கனவே ஒரு ஆண்டிற்கு முன்பு ISCOPE ஒரு ஆண்டு அறிவியல் தொடர்பாற்றல் மற்றும் பத்திரிக்கையியல் சான்றிதழ் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு இந்த சான்றிதழ் படிப்பை முழுவதும் கட்டணம் ஏதும் செலுத்தாமல் படிக்கலாம்.
படிப்பை சிறப்பாக முடிப்போருக்கு Material , சான்றிதழ் வழங்கப்படும். மற்றோர்களும் கட்டணமில்லாமல் படிக்கலாம் அவர்களுக்கு Material, சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.
Syllabus for summer course .
1.கோடை கால பயிற்சி என்பதன் வரலாறு என்ன?நோக்கம்பயன்பாடுயார் யாருக்கு அடுத்த தலைமுறைக்கான தேவையின் முக்கியத்துவம்
2.வாழ்க்கைத் திறன் மற்றும் திறன் தூண்டல்கள் என்பது என்ன?
3. வாழ்க்கைத் திறன்களின் அடிப்படைத் தேவைகள்
4. கற்றல் , திறன் மேம்பாடு
5. சுய திறன் என்பது என்ன? அதை கண்டறியும் உளவியல் முறைகள்
6. தேவை கோட்பாடுNeed - Demand - Supply
7. வாழ்க்கைக்கான தேடல், அறிவுத் தேடல், நிதர்சனம் , உண்மை தேடல்
8. திறனை மேம்படுத்தும் யுக்திகள்
9. மனித ஆற்றல் - உண்மை - பயன்பாடு- விரயம் - காலக்கோடுHuman potential - Performance _truth_Timeline
10. எது உண்மை Reality
இந்த படிப்பில் சேர விரும்புவோர் தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்து இருங்கள்.06-04-2018 அன்று முதல் 13-04-2018 வரை Google form பூர்த்தி செய்து online ல் அனுப்பி வையுங்கள்.
IMPORTANT DATES:
REGISTRATION STARTS FROM 06-04-2018 AND CLOSES ON 13-04-2018
SELECTED PARTICIPANTS LIST WILL PUBLISH ON 14-04-2018
COURSE STARTS ON : 15-04-2018
First Come First Serve
முதலில் form பதிவு செய்யும் 100 ஆசிரியர்கள் மற்றும் 100 மாணவர்களுக்கு மட்டும் இந்த படிப்பு முழுவதும் கட்டணம் ஏதும் பெறாமல் நடத்தப்படும்.
கற்றலானது interactive participation , Group Discussion, Play way , Activity based, Case Study, ....... முறைகளில் நடைபெறும். ஒரு புதுமையான சான்றிதழ் படிப்புக்கு விருப்பமானோரை வரவேற்கிறோம்.
GOOGLE FORM LINK AND ONLINE REGISTRATION LINK https://goo.gl/forms/RNbwXDOWvzpV09ow1
திருமணம், சுற்றுலா, ஆன்மிக பயணத்தின் போது ரயிலில் முன்பதிவு இருக்கைகளை பிறருக்கு மாற்றுவது எப்படி?
ரயிலில் கிடைக்கும் சவுகரியங்களை கருத்தில் கொண்டு பெரும்பாலான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். இதனால், ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக பொங்கல்,
தீபாவளி, கிறிஸ்துமஸ், கோடை விடுமுறை போன்ற காலங்களில் ரயிலில் முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்து பயணிப்பது என்பது தற்போது குதிரை கொம்பாக மாறி வருகிறது. இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் முன்று மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு பயணம் நெருங்கும் போது முன்பதிவு செய்த நபருக்கு பதில் அவரது குடும்பத்தை சேர்ந்த வேறு ஒரு நபர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் நிலைமை எப்படி இருக்கும்?. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை வைத்து புதிய நபரால் பயணிக்க முடியாது.
சரி, இந்த டிக்கெட்டை ரத்து செய்து விட்டு புது டிக்கெட் எடுக்கலாம் என்றால் கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காது. ஆனால், தற்போது முன்பதிவு இருக்கைகளை பிறருக்கு மாற்றும் விதத்தில் ரயில்வே நிர்வாகம் விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதியின் படி முன்பதிவு செய்யப்பட்ட பயணி தன் இருக்கையை வேறு ஒரு நபருக்கு மாற்றித்தர முடியும். முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முதன்மை முன்பதிவு கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மட்டுமே இந்த வசதியை பயணிகள் செய்ய முடியும். அதன்படி, மத்திய, மாநில அரசு அலுவலர்கள் அரசு பணி நிமித்தம் ரயிலில் பயணம் செய்தால் முன்பதிவு இருக்கையை மாற்றம் செய்ய முடியும்.
இவ்வாறு மாற்றம் செய்ய ரயில் பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரியின் அத்தாட்சி கடிதத்தை கொடுத்து பயணசீட்டில் பெயரை மாற்றி வேறு நபர் பயணம் செய்ய முடியும்.
குடும்பத்தில் உள்ள நபர் முன்பதிவு செய்துவிட்டு அந்த குடும்பத்தில் உள்ள ரத்த உறவுகள் அதாவது அப்பா, அம்மா, மகள், மகன், அண்ணன், தங்கை, கணவன், மனைவி ஆகிய நபர்களுக்கு முன்பதிவு செய்ய பயணசீட்டில் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக பெயரை மாற்ற முடியும்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா போன்ற ரயில் பயணங்களுக்கு ஒரு பயணி வரமுடியாத பட்சத்தில் இந்த இருக்கையை அதே கல்விநிறுவனத்தை சேர்ந்த மற்றொரு மாணவருக்கு மாற்றம் செய்ய முடியும்.
இதுவும் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக செய்ய வேண்டும். இந்த பெயர் மாற்றம் ஒரே ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். திருமணம், சுற்றுலா, ஆன்மிக பயணம் போன்று குழு பயணத்தின் போது ஒரு பயணி வரமுடியாத பட்சத்தில் அந்த பயணசீட்டை மற்றொரு பயணிக்கு ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அந்த குழுவின் தலைவரின் அத்தாட்சி கடிதத்தோடு மாற்றம் செய்ய முடியும். தேசிய மாணவர் படையின் உள்ள மாணவர்கள் குழு பயணத்தின் போது ஒரு மாணவனின் பயணசீட்டை மற்றொரு மாணவனின் பெயருக்கு அந்த குழுவில் உள்ள அதிகாரியின் கோரிக்கை கடிதத்தின் மூலமாக ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக மாற்றம் செய்ய முடியும்.
சிறிய நிலையங்களில் வசதியில்லை.
ரயில் டிக்கெட் யார் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர் சென்றால் தான் டிக்கெட்டை மாற்ற முடியும். டிக்கெட்டை கொண்டு வேறு நபர்கள் சென்றால் மாற்றம் செய்ய முடியாது. சிறிய ரயில் நிலையங்களில் இந்த வசதியை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் அவர்கள் கணிப்பொறியில் இந்த பெயர் மாற்றும் வசதி ரயில்வேத்துறையால் மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)