காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி
நாமக்கல் பூங்கா சாலை மற்றும் திருச்செங்கோடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் (23.04.18-திங்கள்) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் தலைமையில் மன்றப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ். மூர்த்தி அவர்களுடன் மன்றத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ரவிக்குமார் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்...