திங்கள், 23 ஏப்ரல், 2018

இரண்டு மாவட்டங்களுக்கு பணியிடை பயிற்சி ஒத்தி வைப்பு~ஜுன் மாதம் நடைபெறும் என அறிவிப்பு…

எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் ~கூடுதலாக வசூலித்தால் புகார் அளிக்கலாம்…

போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மொபைல் ஆப்~பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…

எப்ரல்~23 :உலக புத்தக நாள்…


ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம் என்கிறது யுனெஸ்கோ.

 ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடுகிறது என்றும் கூறப்படுகிறது.

குரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு...


'குரூப் - 2 தேர்வில் 45 பதவிகளுக்கு மட்டும் வரும் 25ல் கவுன்சிலிங் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குரூப் - 2 பணிகளுக்கான, நேர்முக தேர்வு உள்ள பதவிகளை நிரப்ப எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜன., 22 முதல், பிப்., 19 வரை, நேர்காணல் நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.மீதம் உள்ள, 88 காலியிடங்களில், 45 பதவிகளுக்கு மட்டும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 25ல் நடத்தப்படும்.
இதில், 1 : 5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் பங்கேற்கலாம்.
இதுகுறித்த விபரங்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில்
 http://www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, முதல்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று, அடிப்படை சம்பள விகிதம், 9,300 ரூபாயில், ஏதேனும் ஒரு பதவியை தேர்வு செய்தவர்கள், தற்போதைய காலியிடங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

உலகத்தின் மொத்த கடன் 164 லட்சம் கோடி டாலர் ~ சர்வதேச செலாவணி நிதியம் தகவல்…

9 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு...

வாடிக்கையாளர் சரிபார்ப்புக்கு ஆதார் அவசியம்~ ரிசர்வ் வங்கி தகவல்…

ஆயுர்வேதம்,யுனானி, ஹோமியோபதி பயின்றவர்கள் ஆங்கில மருத்துவம் பார்க்கும் திட்டம்~ இணைப்பு பயற்சி மையம் அமைக்க மத்திய அரசு முயற்சி...

வரலாற்றில் இன்று, 22 ஏப்ரல் 2018...


பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (Gaylord Nelson) என்கிற அமெரிக்கர் கருதினார். 

இவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களைக்
கொண்டு நடத்தினார்.

 புவியைப் பாதுகாக்க 
1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று 2 கோடி பேர் கலந்துகொண்ட பேரணியை நடத்தினார்.

 இதுவே உலக புவி தினமாக மாறி புவியை காக்க உறுதிகொள்ளச்செய்துள்ளது.