செவ்வாய், 15 மே, 2018
பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய மற்றும் நகராட்சிகளுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய HRA &CCA பெறுவதற்கான விண்ணப்பங்கள் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில் வழங்கப்பட்டது...
வணக்கம். பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய மற்றும் நகராட்சிகளுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய HRA &CCA பெறுவதற்கான விண்ணப்பங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில் (24-05-218) மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் நேரில் மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் த.தண்டபாணி ஆகியோரால் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் இது சார்பான கோப்பு தற்போது பரிசீலனையில் உள்ளது என்றும் விரைவில் அரசிதழில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பின்னர் இது சார்பாக உதவி இயக்குநர்,மாவட்ட நில அளவை ,நாமக்கல் அவர்களை சந்தித்து நாமக்கல் மாவட்டத்தின் 9ஒன்றியங்களுக்கான மாநகராட்சிக்குரிய வீட்டு வாடகைப்படி பெறுவதற்கான தூர அளவுகளுக்கான ஆணை பற்றிய நிலைமை கேட்டறியப்பட்டது.
மாநகராட்சிக்குண்டான வீட்டு வாடகைப்படி வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இருந்து கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும் ஆனால் நாமக்கல் மாவட்டத்திற்கான வரைபடம் தங்கள் வசம் தற்போது இன்மையால் தங்களால் இன்னும் பதில் அனுப்ப இயலவில்லை என்றும் சென்னைக்கு இது சார்பாக கடிதம் அனுப்பப்பட்டு வரைபடத்திற்காக காத்திருப்பதாக கூறினார்.
9ஒன்றியம் சார்பாக வரைபடம் பெற்று வழங்குவதாக நமது மாவட்ட அமைப்பு சார்பில் உதவி இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டது.வரைபடம் கிடைக்கப் பெற்றதும் இது
சார்பான கோப்புகளை விரைவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதாக உறுதியளித்தார்.
-வெ.வடிவேல்.
மாவட்ட துணைச் செயலாளர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)