சனி, 30 ஜூன், 2018

தமிழகம் முழுவதும் உள்ள கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...

பள்ளிக் கல்வி - 1, 6, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல்~சார்ந்து…

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ஜூலை 2018 ஆம்மாத உத்தேசப் பயணத்திட்டம்...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - உடற்கல்வித் துறை தொடர்பான தகவல்கள் கோருதல் -சார்பு...

வெள்ளி, 29 ஜூன், 2018

பள்ளிக் கல்வி-நாமக்கல் மாவட்டம்-இந்திய குழந்தைகள் நலச்சங்கம், தமிழ்நாடு - தேசிய அளவிலான ஒவியப் போட்டி 2018 - கல்வி மாவட்ட அளவில் ஒருங்கிணைந்து ஓவிய போட்டிகள் நடத்துதல் - சார்பு...

2.41 லட்சம் ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு~ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை~ அமைச்சர் உறுதி…

நான்டிராய்ட் எனும் தோழன்...

கூகுள் குரோமில் புதிய வசதி...

மைக்ரோசாப்டின் செய்தி செயலி...

வியாழன், 28 ஜூன், 2018

125 ரூபாய் நாணயம் வெளியீடு...


புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஜூன் 29 வெளியிடுகிறார்.

கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள் என்பதால் சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

கடந்த 1931ல் ஐ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் நாளை மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாலனோபிசின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, 125 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறார்.