ஞாயிறு, 8 ஜூலை, 2018

Workplace App ல் ஆசிரியர்களுடன் கல்வித்துறை அமைச்சர் கலந்துரையாடல்!

அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களே...

உங்களில் பலர் WORKPLACE ல் இணைந்து பல்வேறு விவரங்களை பகிர்ந்து வருகிறீர்கள்.

உங்களுடன் நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் workplace ல் உள்ள அனைத்து ஆசிரியர்களுடன்  09.07.2018 பிற்பகல் 3.00 மணிக்கு நேரடியாக உரையாடவிருக்கிறார்...

எனவே workplace ல் உள்ள அனைத்து ஆசிரியர்களும் 09/07/18  பிற்பகல் 3.00 மணிக்கு தவறாமல் அவரது  உரையை பார்க்க வேண்டும் என வேண்டுகிறோம்.

Pension and Other Retirement Benefits...

பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு~அரசாணை வெளியீடு…

சனி, 7 ஜூலை, 2018

DEE PROCEEDING- பள்ளி பாதுகாப்பு சார்ந்து தேசிய பேரிடர் மேலாண்மைக்கு பள்ளி பாதுகாப்பு திட்டம் குறித்து அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...

இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடுவதற்கு ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்...

விண்வெளியில் ஏவும்போது சிக்கல் ஏற்பட்டால் ராக்கெட்டில் இருப்பவர்களை மீட்கும் புதிய தொழில்நுட்ப சோதனை வெற்றி...

140 பேருக்கு 'கனவு ஆசிரியர் விருது'...

பொன்விழா ஆண்டு நிறைவு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு...

கோவை வேளாண் பல்கலையில் தமிழ் இணைய மாநாடு துவக்கம்...

நாட்டில் 7 சதவிகிதம் பேர் மட்டுமே எளிதாக வீட்டுக்கடன் பெறுகின்றனர்~ ஆய்வில் வெளியான தகவல்…!


புதுதில்லி;
வெறும் 7 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே வீட்டுக் கடன்களை எளிதாகப் பெறுவதாக ஆய்வில் ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சொத்து விவகாரங்கள் தொடர்பான இணையதளமான 'மேஜிக் பிரிக்ஸ்' நடத்திய இந்த ஆய்வின்படி, வீட்டுக்கடன் பெறுவது குறித்தும், கடனைப் பெறுவதற்கான செயல்முறைகள் குறித்தும் 93 சதவிகித வாடிக்கையாளர்கள் அச்சப்படுவதும் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வு மேலும் கூறுவதாவது:
அதிகரித்து வரும், வட்டி விகிதங்கள் 45 சதவிகிதம் பேர் வீடு வாங்குவதற்கான முட்டுக்கட்டையாக உள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகமாக இருப்பதை 27 சதவிகிதத்தினரும், கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள் கடினமாக இருப்பபதை 21 சதவிகிதத்தினரும் மிகப்பெரும் தொல்லையாக கருதுகின்றனர்.

வீடமைப்பு நிதியுதவிச் சந்தையில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும், வெறும் 7 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வீட்டுக் கடன் பெறுவது எளிதாக அமைகிறது. ஆனால், வங்கிகள் இதுபோன்ற விஷயங்களில் அக்கறை செலுத்துவதில்லை. கடன் பெறுவோர் அக்கடனைச் சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்வதிலேயே வங்கிகள் கவனம் செலுத்துகின்றன. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.