சனி, 8 செப்டம்பர், 2018
ஈரோடு மாநகராட்சிக்குரிய 1b நிலை HRA & CCA வழங்குவதற்கு , மேல் நடவடிக்கைளை விரைந்து செயல்படுத்துமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து மன்றப் பொறுப்பாளர்கள் வலியுறுத்தல்...
07/09/18,பிற்பகல் 03.00 மணியளவில்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்)
திரு. சே.ஈஸ்வரன் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கபிலர்மலை ஒன்றியத் தலைவர் ந.மணிவண்ணன், செயலாளர் மெ.சங்கர் ஆகியோர் சந்தித்து ஈரோடு மாவட்ட அரசிதழ் அறிவிக்கையில், ஈரோடு மாநகராட்சி எல்லையிலிருந்து 16 கி.மீ சுற்றெல்லைக்குள் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட வருவாய் கிராமங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு உதவிட வேண்டுமாய் வலியுறுத்தினர்.
மதிப்புமிகு. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அரசிதழ் அறிவிக்கை அச்சிடுவதற்கு வரும் திங்கட்கிழமை ( 10/09/18) சேலத்திற்கு அனுப்பப்பட்டு, ஒரு வாரத்தில் அறிவிக்கை வெளியாகும் என உறுதியான தகவல் அளித்தார்கள்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் நாமக்கல் மாவட்டத்தின் 5 ஒன்றியங்களில் (பள்ளிபாளையம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், கபிலர்மலை மற்றும் பரமத்தி ) பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர் மற்றும் அரசூழியர்களுக்கும் ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை வழங்க கோரி தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
/மெ.சங்கர்/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)