செவ்வாய், 22 ஜனவரி, 2019

அன்பானவர்களே!வணக்கம்! எருமப்பட்டி ஒன்றியத்தின் தலைமையாசிரியர் பெருமக்களே!ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்களே! தங்களுக்கு என் வேண்டுகோள்:-

ஜாக்டோ-ஜியோ வின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிப்பெறச்செய்யுங்கள்.

கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து மன்னித்துவிடுங்கள்.
எதிர்கால ஆபத்துக்களை,
அபாயங்களை ,
பாதிப்புகளை ,
சேதாரங்களை கணக்கிலும்,
கவனத்திலும் கொள்ளுங்கள்.
ஆசிரியர் சமுதாயத்தின் கண்ணியத்திற்கும்,தன்மானத்திற்கும் கேடு சூழ்கிறது.
58வயது முடிய ஆசிரியர் பணி என்பது கேள்விக்குறியாகிறது.
மதிப்பான, கெளரவமான ஆசிரியப்பணி ஓய்வு என்பது கனவாகிவிடுமோ!?எனும் அச்சம் எழுகிறது. இதோ,அவைகளில் ஒருசில...

*பள்ளிகள் இணைப்பு தலைமையாசிரியர்  பணியை,பதவியை காலிசெய்கிறது.

*எல்கேசி.,யூகேசிக்கு ,வலுகட்டாயமாக இடைநிலை ஆசிரியரை  நியமிப்பது தகுதி நிலை இறக்கமாகிறது.

*நடுநிலைப்பள்ளிகளில் 2+1 எனும் நிர்ணயம் பணி இழப்பை அதிகமாக்குகிறது.

*3500தொடக்கப்பள்ளிகள் மூடுதல் ஆசிரியர்களை பணி இழக்கச்செய்கிறது.ஏழை,எளிய மக்களுக்கு கல்வி மறுப்பை உருவாக்குகிறது.

*5000பள்ளிகள் இணைப்பு என்பது தொடக்கக்கல்வித்துறையையே அழிக்கிறது.வட்டாரக்கல்வி அலுவலர் பணிமாற்றம் வாய்ப்பைப்பறிக்கிறது.வணிகமயக்கல வியை,தனியார்மயக்கல்வியை வளர்க்கச்செய்கிறது.

*பொதுக்கல்விமுறைக்கும்,இலவசதாய்மொழிவழிக்கல்விக்கும் , அரசுப்பள்ளிக்கும் பெரும் அச்சுறுத்தல் ,ஆபத்து விளைந்துள்ளது.

*இத்தகு பல்வேறு வகை ஆபத்திலிருந்து நம்மை,
நம் ஆசிரியர் இனத்தை,
தமிழ்நாட்டுக்கல்வியை ,
அரசுப்பள்ளிகளை பாதுக்காத்துக்கொள்ள நம்முன் உள்ள ஒரேவழி ,
ஒரே மருந்து ஜாக்டோ-ஜியோ வின்
2019 சனவரி 22 ஆம்நாள் முதலான காலவரையற்ற வேலைநிறுத்தமே !

எனவே,எத்தகு தயக்கமும்,
அவநம்பிக்கையும்  கொள்ளாமல் வேலைநிறுத்தத்தில்  பங்கேற்று வாழ்வை வெற்றிகரமாக்கிக்கொள்ளுங்கள்!
போராட்டக்களத்தில் ஆசிரியப்போராளியாக, எல்லோருக்கும் நன்மை செய்பவராக செயல்படும் முடிவெடுங்கள்! செயலாற்றுங்கள்!
நன்றி.  
-முருகசெல்வராசன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்டம் ~ 21.01.19அன்று திருச்செங்கோட்டில் கூடிய ஒன்றியச்செயலாளர்கள் கூட்டம் ~ ஜாக்டோ-ஜியோவின் 22.01.19 முதலான காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்க முடிவு…

போராட்டத்தில் கலந்துகொள்ளும் நமக்குரிய பணிப்பாதுகாப்புகள்...

ஜாக்டோ-ஜியோ~ மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பியுள்ள 9 அம்ச கோரிக்கை கடிதம்…

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 172வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு 25.01.2019 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 7அம்சக் கோரிக்கைகள்~ திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரிடம் பெருந்திரள் முறையீடு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 7 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்ட தொடர்போராட்டங்களை நடத்த உள்ளது.

அதில் முதல்கட்டமாக  21.1.2019 பிற்பகல் 5 மணிக்கு  திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக அலுவலர் அவர்களை சந்தித்து பெருந்திரள் முறையீடு.இச்சந்திப்பில் மாநில மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

திங்கள், 21 ஜனவரி, 2019

ரயில் வருகையை வாட்ஸ் அப்பில் அறியலாம் ~ இந்தியன் ரயில்வே அறிவிப்பு…

டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பணம் திருடுபோவதை தடுக்க புது டெக்னிக்...

சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுசெய்யும் ஆவணத்தை திரும்ப வழங்கும் புதிய நடைமுறை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~ பரமத்தி ஒன்றிய செயற்குழு கூட்டம் ~ நாளிதழ் செய்திகளில்...