ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

தொடக்கக்கல்வி சிறுபான்மையினர்மொழி தெரிந்த வ.க.அலுவலர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்



குரூப் - 1 தேர்வு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு...

குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு, மார்ச், 3ம் தேதியும், முதன்மை எழுத்து தேர்வு, மே மாதம் கடைசி வாரத்திலும் நடக்கும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முதன்மை எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.அதன்படி, முதன்மை எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.எனவே, தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் தர வேண்டும் என்பதால், முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என, உத்தேசிக்கப்பட்டுள்ளது.முதல்நிலைத் தேர்வு, முன்னர் அறிவித்தபடி, மார்ச், 3ம் தேதி நடக்கும். எனவே, விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான கால அவகாசத்தை பயன்படுத்தி, புதிய தேர்வு திட்டம் மற்றும் பாடத் திட்டத்திற்கு தயாராக வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்தும் மசோதா தாக்கல்...

ஆசிரியர்கள் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் மாநிலதிட்ட-இயக்குனர் அதிரடி உத்தரவு...

சனி, 9 பிப்ரவரி, 2019

TNSchools Attendance App-ல் ஆசிரியர்கள் வருகையைப் பதிவுசெய்யும் முறை...

DSE~GO:19 , DATE : 07.02.2019 - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு…

பள்ளிகளில் Attendance App-ன் மூலமாக ஆசிரியர்களின் வருகைப் பதிவுகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளுதல் சார்பு...

JACTTO ~ GEO : தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட் 2019 குறித்து ஜாக்டோ ஜியோ செய்தி அறிக்கை...

இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு~விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி…

இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி நாளாகும்.

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எஃப்.டி. மற்றும் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பி.டெக்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு, அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. பிரதானத் தேர்வு (அட்வான்ஸ்டு) ஆகியவை நடத்தப்படுகின்றன.

முதல் நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி.. சி.எஃப்.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அதேசமயம், முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, பிரதானத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சி.பி.எஸ்.இ.) , பிரதானத் தேர்வை ஏதாவது ஒரு ஐஐடி-யும் இதுநரை நடத்தி வந்தன. இந்த நிலையில், 2019 ஆம் கல்வியாண்டுக்கான முதல்நிலைத் தேர்வை நடத்தும் பொறுப்பை மத்திய அரசு என்.டி.ஏ. விடம் ஒப்படைத்தது.

புதிய நடைமுறை: 
அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் புதிய நடைமுறையை  என்.டி.ஏ. அறிமுகம் செய்தது. அதாவது தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.
அதாவது, ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வில் திருப்திகரமான மதிப்பெண் பெறாத மாணவர்கள், உடனடியாக  ஏப்ரலில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்கலாம். இந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்  எதுவோ அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இரண்டு தேர்வுகளுக்குப் பிறகே ஜே.இ.இ. பிரதானத்  தேர்வு நடத்தப்படும்.
அதனடிப்படையில், முதல் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு ஜனவரி 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் தாள்-1 ஜனவரி 19 ஆம் தேதியும், தாள் இரண்டு ஜனவரி 31 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. 

இப்போது, இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வானது ஏப்ரல் 7 முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசியாகும்.

மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in, www.jeemain.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு/ ஊராட்சி/பேரூராட்சி/நகரவை/மாநகரவை பள்ளிகளில் சத்துணைவு கூடம் இல்லாத பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்புதல் ~ சார்பு…