ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

அஞ்சல் வாக்கு செலுத்தும் விதம் ~ விளக்கம்…

1) முதலில் உறுதி மொழி படிவத்தில் (declaration Form) 13A ல் முன்,பின் என  இரண்டு பக்கங்கள் இருக்கும்.

🖊முன்புறம் மட்டும் மேல்பகுதியில் வாக்கு சீட்டு எண்ணை (Ballot paper no) எழுதி கையெழுத்திட வேண்டும்.

🖊கீழ்பகுதியில் உறுதிமொழி படிவத்தில் மேலொப்பம் இட   (attestation) ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் இரண்டு தாசில்தார்கள் சீலுடன் ரெடியாக இருப்பார்கள்.

2) இரண்டாவதாக வாக்கு சீட்டு உள்ள கவர் படிவம் - 13 B வாக்குசீட்டு (Ballot Paper) மடித்து வைக்கப்பட்டு இருக்கும்.

🖊அதன் கவர்மீது (Postal Ballot Paper cover 13 - B) வாக்கு சீட்டு எண் குறிப்பிட வேண்டும்.

🖊வாக்கு சீட்டில் பந்துமுனைப் பேனாவால் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு நேரில் அந்த கட்டத்திற்குள் மட்டும் இருக்கும்படி ஒரே ஒரு டிக் √ அடிக்கவும்.

🖊மை பேனாவால் டிக் அடித்து பின்பு மடிக்கும் போது ஒருவேளை மற்றோரு சின்னத்திலோ அல்லது மற்றொரு வேட்பாளருக்கு எதிராகவோ மை கசிந்து விட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.

🖊எனவே டிக் √ குறியீட்டை மிக கவனமாக அடியுங்கள்.Over writing வேண்டாம்.

🖊சின்னத்தில் ஒரு டிக்,வேட்பாளர் பெயரில் ஒரு டிக் என இரண்டு டிக் அடித்து விடாதீர்கள்.

🖊பின்பு வாக்குசீட்டை தேர்தல் அலுவலர் எவ்வாறு மடித்து வைத்துள்ளாரோ அவ்வாறே மடித்து உள்ளே வைத்து கவரை ஒட்டி விடவும்.

3) அடுத்து படிவம் -  13 C.இது ஒரு கவர்.இதில் படிவம் 13A (உறுதிமொழி படிவம்) மற்றும் 13 -B வாக்குசீட்டை வைத்து ஒட்டப்பட்ட கவர் இரண்டையும்  (Ballot paper உள்ளகவர்)  இந்த 13 -C கவரினுள் வைத்து ஒட்ட வேண்டும்.

🖊இந்த கவரின் மீது இடது பக்க ஓரத்தில் signature of the sender என இருக்கும். இதன் மீதும் கண்டிப்பாக கையெழுத்து இடவேண்டும்.

🖊இல்லை என்றால் நமது ஓட்டு கவரினை பிரித்து பார்க்காமல் அப்படியே தூர வைத்து விடுவார்கள்.
நமது வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.

4) நிறைவாக படிவம் 13 -D.இது வாக்காளருக்கான வாக்களிக்க உதவும் வழிகாட்டி குறிப்பு.(Information letter)

🖊இந்த படிவத்தின் இறுதியில் இரண்டு கோடுகள் இருக்கும்.
அதில் 08 am on 23.05.2019 என எழுத வேண்டும்.

குறிப்பு: 

1)ஒரு தேர்தல் பயிற்சி வகுப்பில் இரண்டு தாசில்தார்கள் Attest பண்ண சீலுடன் இருப்பார்கள்.

2)நாம் வரிசையில் நின்று பொறுமையாக வாக்களிக்க வேண்டும்.

உங்கள் வாக்கு உங்கள்  உரிமைகளையும் கோரிக்கைகளையும் பெற்றுதரும்...

சனி, 6 ஏப்ரல், 2019

ஆசிரியர்கள் தபால் ஓட்டுகளை தவறின்றி வாக்களிப்பது எப்படி?


ஆசிரியர்கள் தபால் ஓட்டுகளை தவறின்றி வாக்களிப்பது எப்படி?

7 ஆம் தேதி தபால் வாக்களிக்கும் அரசு ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் வரவேண்டும் ~ அதிகாரிகள் தகவல்…

*பரமத்தி ஒன்றியத்தில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் குறைதீர் மனுவினை விரைந்து பெறுவதற்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டுதல் சார்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பம்*

*பரமத்தி ஒன்றியத்தில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில்  வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள்  குறைதீர் மனுவினை விரைந்து பெறுவதற்கு  வழிகாட்டுதல் வழங்க வேண்டுதல் சார்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பம்*

பாகம் எண் , வரிசை எண் அறிய Mobile App...

வெள்ளி, 5 ஏப்ரல், 2019