ஞாயிறு, 3 நவம்பர், 2019

நிலாவில் புதிய வாயு~ இஸ்ரோ கண்டுபிடிப்பு…

இணையதளத்தின் மூலம் பி.எப் கணக்கு எண்ணை ஊழியரே உருவாக்கலாம்...

*🌷நவம்பர் 3,*
*வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
*காந்திஜி பற்றிய ஆவணப்படத்தை எடுத்தவரும், பயண இலக்கியத்துக்கு முன்னோடியுமான ஏ.கே.செட்டியார் பிறந்த தினம் இன்று(1911).*

*திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்தவர்.*

 *இவரது இயற்பெயர் கருப்பன்.*
*திருவண்ணாமலையில் நடுநிலைப் பள்ளிக் கல்வி வரை பயின்றார். சிறுவயது முதலே எழுதும் ஆர்வம் கொண்டிருந்தார். 17ஆவது வயதில் இவர் எழுதிய ‘சாரதாம்பாள் - சிறு தமாஷ்’* *என்ற கதை ஆனந்தவிகடனில் வெளிவந்தது.*
*பர்மாவில், 1930இல்* *'தனவணிகன்’ என்ற மாத இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார்.* *1935இல் ஜப்பான் இம்பீரியல் ஆர்ட்ஸ் கழகத்தில் சேர்ந்து புகைப்படக் கலையைப் பயின்றார்.* *அதில் சிறப்புப் பயிற்சி பெற நியுயார்க் சென்று ஃபோட்டோகிராபிகல்* *இன்ஸ்ட்டிடியூட்டில் ஓராண்டு டிப்ளமோ பெற்றார்.*
*முதன்முதலாக மகாத்மா காந்தியைப் பற்றிய வரலாற்று ஆவணப்படம் எடுத்தார். 1937இல்* *தென்னாப்பிரிக்கா சென்றார். மேலும் பல நாடுகளுக்குச் சென்று அந்நாட்டு அரசு மற்றும் தனியார்களிடம் இருந்து காந்திஜி வாழ்க்கை தொடர்பாக சுமார் 50,000* *அடிப் படச்சுருள்களைச் சேகரித்தார்.*
*3 ஆண்டு காலமாகத் தான் திரட்டிய தகவல்கள்,* *ஆவணங்களின் அடிப்படையில், ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கை சம்பவங்கள்’ என்ற* *படத்தைத் தமிழில் தயாரித்து, 1940ஆம் ஆண்டு வெளியிட்டார்.* *இதன்மூலம் முதன்முதலாக மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படம் எடுத்தவர் என்ற பெருமையைப்* *பெற்றார். அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு பயந்து திரையரங்குகள் இதைத் திரையிட முன்வரவில்லை.*
*இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ஆம் ஆண்டு, சுதந்திர தினத்தன்று புதுடில்லியில் இந்தி மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதையே 1953இல் ஆங்கிலத்தில்* *தயாரித்து ஹாலிவுட்டில் வெளியிட்டார்.*
*1912இல் கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், காந்தியுடனான அவரது சந்திப்பு, நேருஜி கைராட்டினம் சுற்றும் காட்சி, உப்பு சத்தியாக்கிரகத்தை* *முடித்துக்கொண்ட காந்தியடிகள், தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் ஆவணப் படத்தில் இடம்பெற்றிருந்தன.*


*பல நாடுகளுக்கும் தான் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி நூல்கள் எழுதி வெளியிட்டார்.* *‘உலகம் சுற்றும் தமிழன்’ என்று இவர் எழுதிய நூற்பெயரே இவரது அடை மொழியாகவும் சிறப்புப் பெயராகவும் மாறியது. மேலும் ‘பிரயாண நினைவுகள்’, ‘மலேயா முதல் கனடா வரை’, ‘கயானா முதல் காஸ்பியன் கடல்வரை’, ‘குடகு’, ‘இட்ட பணி’, ‘ஐரோப்பா வழியாக’, ‘ஜப்பான் கட்டுரைகள்’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.*
*விளம்பரத்தை விரும்பாதவர் என்பதால், இவரது புகைப்படம் கிடைப்பதுகூட அரிதாக இருந்தது. பாரதியிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அவரது தொகுக்கப்படாத படைப்புகளைக் கண்டெடுத்து வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார்.* *1943இல் ‘குமரி மலர்’ என்ற மாத இதழை வெளியிட்டார்.*
*ச.வையாபுரிப் பிள்ளை, க.அ.நீலகண்ட சாஸ்திரி, டி.எஸ்.சொக்க லிங்கம், ஏ.என். சிவராமன், பாரதிதாசன், டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர., கல்கி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி உள்ளிட்ட பல இலக்கியவாதிகள் இதில் தொடர்ந்து எழுதி வந்தனர்.*
*1850 முதல் 1925ஆம் ஆண்டு வரை பல்வேறு இதழ்களில் வெளிவந்த 140 கட்டுரைகள் அடங்கிய ‘தமிழ்நாடு பயணக் கட்டுரை’ என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டார்.*

*தமிழில் பயண இலக்கியத்தைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமைக்குரிய ஏ.கே.செட்டியார், 1983ஆம் ஆண்டு, 72ஆவது வயதில் காலமானார்.*
*🌷நவம்பர் 3,*
*வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------------
 *பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பிறந்த தினம் இன்று.*

*+அமர்த்தியா சென் (Amartya Sen)* *இந்தியாவைச் சேர்ந்த ஒரு-* *பொருளாதார* *அறிஞர் ஆவார்.*

*இவர் 1998இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999இல் பாரத ரத்னா விருதும் பெற்றார்.*

 *இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.*
*🌷நவம்பர் 3,*
*வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
 *1957ஆம் ஆண்டு ஸ்புட்னிக்2 விண்கலம் மூலம் லைக்கா எனும் நாயை,  சோவியத் விண்வெளிக்கு அனுப்பிய தினம் இன்று.*


*பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினம் இது.*

*ஸ்புட்னிக்2 புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும்.*

*சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது.*

*விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள விலங்கு இதுவாகும். இக்கலம் 4 மீட்டர் (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி விட்டமும் கொண்ட ஒருகூம்பு வடிவம் கொண்டது.*

*இது பல ஒலிபரப்பி தொலை அளவைத் தொகுதி, கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.*

 *இன்னொரு மூடப்பட்ட  அறையில் லைக்கா வைக்கப்பட்டது.*

சனி, 2 நவம்பர், 2019

2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாள்


மாணவர்கள் ஆளுமை திறன் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்-திறனறிப் போட்டிநடத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள் 01.11.19








பள்ளி தலைமை பண்புகள் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பதிவேற்றம் செய்தல் சார்ந்து சார்ந்த இயக்குநர் செயல்முறை நாள் 1.11.19



*🌷இனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்*

*🌷பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.*

*🌷ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இந்த வசதியைப் பெறலாம். உலகளவில் பெருமளவில் வாடிக்கையாளர்களை தன்வசப் படுத்தி வைத்துள்ள வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்தே பல்வேறு புதுமைகளை அதில் புகுத்தி வருகிறது.*

*🌷அந்த வரிசையில் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.*

*🌷இந்த வசதி முன்னரே ஐஓஎஸ் போன்களில் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.*

*🌷தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் இதனை கொண்டுவந்துள்ளனர்.*

*🌷இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வியாழக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், "ஆண்ட்ராய்டு போன்களுக்காக ஃபிங்கர் பிரின்ட் வசதியை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் பயன்பாட்டாளர்கள் ஹேக்கர்கள், குடும்ப உறுப்பினர்கள், பிரிந்து சென்ற காதல் உறவுகளிடமிருந்து தங்களின் உரையாடல்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.*

*🌷முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டச் ஐடி, ஃபேஸ் ஐடி வசதியை ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தினோம். தற்போது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்காக கைரேகை பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் புதிய வெர்சனை டவுன் லோட் செய்தால் போதும் இந்த வசதியைப் பெறலாம்.*

*🌷செட்டிங்க்ஸுக்குச் சென்று, அக்கவுன்ட் பகுதியை க்ளிக் செய்து அதில் ப்ரவைசி என்பதை க்ளிக் செய்தால் ஃபிங்கர் பிரின்ட் லாக் என்ற ஆப்ஷன் இருக்கும். அதைத்தேர்வு செய்தால் போதும் உங்கள் வாட்ஸ் அப் செயலியை உங்களைத்தவிர யாரும் திறக்க இயலாது (tap Settings, go to Account, then Privacy and Fingerprint Lock. Turn on Unlock with fingerprint, and confirm your fingerprint)" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🌷வளர்ந்துவரும் விஞ்ஞான உலகில் ஒருவரது அந்தரங்கம் பாதுகாக்கப்படுவது சிரமமான ஒன்று. வாட்ஸ் ஆப் பயனாளர்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் பாதுகாப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுத்த இந்த வசதி பெரிதும் உதவும் என பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.*

NMMS பதிவு செய்யாத பள்ளிகள் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு