சனி, 18 ஏப்ரல், 2020

வெளியில் செல்லக் கூடாது: தமிழக அரசு உத்தரவு:
##############
அவசரப் பணியை மேற்கொள்ளும் அரசு அலுவலா்கள், பணி நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊழியா்களுக்கு அண்மையில் மாநில அரசு பிறப்பித்தது. அதன் விவரம்:-

அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், அலுவலா்கள், பணியாளா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் சிறப்பு அலுவல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள். இவ்வாறு பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வரும் அரசு அலுவலா்களும், பணியாளா்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியிலும், அலுவலக நுழைவு வாயிலிலும் காவல் துறையினா் கோரும் போது அலுவலக அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.

மேலும், அலுவலகப் பணி நேரங்களில் அலுவலா்கள், பணியாளா்கள் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்: பல்வேறு துறைகளில் உள்ள மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளா்களின் உடல் குறைபாட்டை கருத்தில் கொண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அவா்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்களித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தேசிய அளவிலான ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் அரசு அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் இருந்து மே 3-ஆம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
நன்றி:தினமணி.

1 முதல் 12 வகுப்பு பாடநூல்களின் PDF...

ALL TEXT BOOKS PDF...

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எளிய அறிவியல் சோதனைகள்...

SCIENCE EXPERIMENTS FOR UPPER PRIMARY...

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணித விளையாட்டு ...

PRIMARY  MATH GAMES...

1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கான SPOKEN ENGLISH வீடியோக்கள்...

SPOKEN ENGLISH VIDEOS... Click here...

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

மத்திய வருவாய் துறை அலுவலர்களிடம் மாதம் ஒருநாள் என ஓராண்டுக்கு ஊதியப்பிடித்தம். மத்திய அரசு சுற்றறிக்கை வெளியீடு.
ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்கள்_ கடன் தவணையை செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கிட வலியுறுத்தி நிதி மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்..

*✳கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல் சார்பான நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் செயல்முறைகள்.*