திங்கள், 20 ஏப்ரல், 2020

மே 3 ஆம் தேதிவரை  ஊரடங்கு தளர்த்தப்படாது

தமிழக அரசு அறிவிப்பு

பாடங்களை இணைய வழியில் நடத்த உயர் கல்வித்துறை அறிவுறுத்தல்..

2019-2020 நிதி ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதில் சலுகை ~ மத்திய அரசு அறிவிப்பு…

2019-2020 நிதி ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் தவணைகள் 3 மாதம் ஒத்திவைப்பு, இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்த மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. அரசு அறிவித்துள்ள சலுகைகளை ஒட்டி ஆண்டு வருமான கணக்கீட்டுக் காலத்தை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

சனி, 18 ஏப்ரல், 2020

வெளியில் செல்லக் கூடாது: தமிழக அரசு உத்தரவு:
##############
அவசரப் பணியை மேற்கொள்ளும் அரசு அலுவலா்கள், பணி நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊழியா்களுக்கு அண்மையில் மாநில அரசு பிறப்பித்தது. அதன் விவரம்:-

அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், அலுவலா்கள், பணியாளா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் சிறப்பு அலுவல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள். இவ்வாறு பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வரும் அரசு அலுவலா்களும், பணியாளா்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியிலும், அலுவலக நுழைவு வாயிலிலும் காவல் துறையினா் கோரும் போது அலுவலக அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.

மேலும், அலுவலகப் பணி நேரங்களில் அலுவலா்கள், பணியாளா்கள் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்: பல்வேறு துறைகளில் உள்ள மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளா்களின் உடல் குறைபாட்டை கருத்தில் கொண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அவா்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்களித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தேசிய அளவிலான ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் அரசு அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் இருந்து மே 3-ஆம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
நன்றி:தினமணி.

1 முதல் 12 வகுப்பு பாடநூல்களின் PDF...

ALL TEXT BOOKS PDF...

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எளிய அறிவியல் சோதனைகள்...

SCIENCE EXPERIMENTS FOR UPPER PRIMARY...

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணித விளையாட்டு ...

PRIMARY  MATH GAMES...