ஞாயிறு, 26 ஜூலை, 2020
ஜூலை 26, வரலாற்றில் இன்று. ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம் இன்று(1856).
ஜூலை 26, வரலாற்றில் இன்று.
ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம் இன்று(1856).
*அயர்லாந்து நாடக ஆசிரியர்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே.
இவர் நோபல் பரிசையை மறுத்தவர்.
ஜார்ஜ் பெர்னாட் ஷா 1856 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அயர்லாந்தின் டப்ளின் நகரில் பிறந்தார்.பெற்றோர் ஜார்ஜ் கார் ஷ -லூசிண்டா எலிசபெத் ஷா.இவரின் தாய் பாடகி.இவரின் தந்தை அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தார். இவரது தந்தை குடித்து குடித்தே பணத்தை செலவழித்தார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது.இவரின் தாய் இவரை அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்தனர்.இவருக்கு இவரின் அம்மா தரும் ஒரு பவுண்டு பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டார்.இவருக்கு பத்து வயது நிறைவதற்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தார். சிறு வயதில் தாயிடம் இசையைக் கற்றார்.
இவர் குடும்ப வறுமை நிலமைக்கு தந்தையின் குடிப்பழக்கம்தான் காரணம் என்பதை சிறுவயதிலேயே உணர்ந்தார்.அதனால் மதுவைத் தொடுவதில்லை என்று உறுதி பூண்டார்.இவரின் தந்தை இறந்து போனபோது அவரது இறுதிச்சடங்கில்கூட கலந்து கொள்ளவில்லை குடும்ப உறுப்பினர்கள். இவரின் குடும்ப வறுமை காரணமாக பத்தாவது வயதில்தான் பள்ளிச்சென்று கல்வி கற்றார்.இவரால் நான்கு ஆண்டுகள்தான் பள்ளியில் படிக்க முடிந்தது.
இவரின் பதினைந்தாவது வயதில் வேலைப் பார்க்கத் தொடங்கினார்.இருபதாவது வயதில் இங்கிலாந்துச்சென்றார்.நிறைய எழுதத் தொடங்கினார். தன்னுடைய எழுத்துகளை ஆர்வத்துடன் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார். ஆனால் அனுப்பபட்ட வேகத்திலேயே அது திரும்பி வந்துவிடும்.அவை திரும்பி வந்தாலும் தொடர்ந்து எழுதினார். பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகத் தொடங்கின.
இவர் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்ட இசையை பயன்படுத்தி இசை விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார்.பின்னர் நாடக விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார்.நாடக விமர்சனங்களுக்கு பின்பு தாமே நாடங்களை எழுதத் தொடங்கினார்.
விடோயர்ஸ் ஹவுசஸ் என்ற முதல் நாடகத்தை எழுதினார்.இதன் பின்னர் ,Candida, The Devil's Disciple, Arms and the Man, Saint Joan, Pygmalion, The Apple Cart, The Doctor's Dilemma, போன்ற நாடகங்கள் இவருக்கு பெரும் புகழ் சேர்த்தன. இவரது பல படைப்புகள் மேடைகளில் அரங்கேறின.
அந்த காலக்கட்டத்தில் லண்டன் நாடக மேடைகள் பொழுதுபோக்கு அரங்குகளாக இருந்தன. அதை நீதி, அரசியல், பொருளாதார விவகாரங்களை எடுத்துக்கூறும் மன்றங்களாக மாற்றி அமைத்தார் பெர்னாட்ஷா. இவரது அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பிரதிபலித்தன.இவர் புரட்சிகரமான கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் எழுதினார்.
இவரை இங்கிலாந்தின் பிளேட்டோ என்று வருணித்தது இலக்கிய சமூகம்.இவர் தன் எழுத்தில் கேலி, நையாண்டி, நகைச்சுவை ஆகியவற்றை கலந்து கொடுத்தார். எழுத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இவர் நகைச்சுவையையும், நையாண்டியையும் பயன்படுத்துவார். பெரிய சபைகளில்கூட தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் இவரிடம் இருந்தது.
ஷேக்ஸ்பியருக்கு அடுத்து ஆங்கில இலக்கிய உலகம் சந்தித்திருக்கும் மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னாட்ஷா.இவர் அறுபத்து மூன்று நாடகங்களை எழுதினார்.இவர் ஒரு நாவலாசிரியர், விமர்சகர், கட்டுரையாசிரியர் மற்றும் தனியார் கடிதவியலாளர்.இவர் 2,50,000 கடிதங்களை எழுதியுள்ளார்.
சிட்னி வெப் மற்றும் பீட்ரைஸ் வெப் மற்றும் க்ரஹாம் வால்லஸ் ஆகிய ஃபேபியன் சொசைட்டி உறுப்பினர்களுடன் இணைந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தை 1895 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா நிறுவினார்.
1925ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெர்னாட் ஷாவிற்கு வழங்கப்படுவதாக அறிவித்தது நோபல் குழு.இவருக்கு வந்த நோபல் பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்தார்.பரிசுத் தொகை இவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார்.
பெர்னாட் ஷா நோபல் பரிசை மட்டும் வெறுக்கவில்லை. கௌரவ பட்டம், பதக்கம், பாராட்டு விழா, புகழுரை போன்றவற்றையும் அறவே வெறுத்தார்.தனது கடைசி நிமிடம் வரை படிப்பதையும், எழுதுவதையும் கைவிடவில்லை..நல்ல நகைச்சுவை உணர்வும், சைவ உணவே விரும்பி உண்டது இவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தன. புகைப்பிடிக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ அறவே இல்லை அதனால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்.
இவர் 1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி தமது 94-ஆவது அகவையில் காலமானார்.
பெர்னாட் ஷாவின் பொன்மொழிகள்:
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியை ஈட்டுகின்றனர்.
தன்னைத்தானே சீர்த்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி.
ஒன்றுமே செய்யாமல் வெட்டியாய் கழிக்கும் ஒரு வாழ்க்கையை விட பிழைகள் செய்து வாழும் வாழ்க்கை பயன்மிக்கது, பெருமைமிக்கது.

ஜூலை 26,வரலாற்றில் இன்று.இந்தியாவில் முதன்முதலாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணை 1902, ஜூலை 26இல் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் கோலாப்பூர் சமஸ்தான மன்னர் சத்ரபதி சாகுமகராஜா.
ஜூலை 26,
வரலாற்றில் இன்று.
இந்தியாவில் முதன்முதலாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணை 1902, ஜூலை 26இல் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் கோலாப்பூர் சமஸ்தான மன்னர் சத்ரபதி சாகுமகராஜா.
சாகு மகாராஜா இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததும் பார்ப்பனர்கள் மற்ற சமஸ்தான மன்னர்கள் இவரைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தந்து தொலைத்தால் என்ன செய்வது என அஞ்சினர். சமஸ்தான மன்னர்களிடம் இடஒதுக்கீடு திட்டத்தைப் பற்றி குறைகூறினர். மன்னர்களும் பார்ப்பனர்கள் குடைச்சல் கொடுத்தால் தாங்கமுடியாதே என்றும், பார்ப்பனரல்லாதார் இடஒதுக்கீடு கேட்டு போராடத்தில் இறங்கிவிடக்கூடாதே என்றும் கவலைப்பட்டனர். எனவே எப்படியாவது சாகு மகாராஜாவை மனம்மாற்றி இடஒதுக்கீட்டை கைவிட வைக்க சிலர் விரும்பினர்.
சங்லி எனும் சமஸ்தான மன்னர் பட்வர்தன் தன் பார்ப்பன வழக்கறிஞர் கண்பத்ராவ் அபயங்கர் என்பரை சாகு மகாராஜாவை கன்வின்ஸ் பண்ண அனுப்பினார். அபயங்கர் கோலப்பூர் சென்று சாகு மகாராஜாவை சந்தித்து "எங்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) ஏன் இத்தகு அநீதியை (பிற்பட்டோர் இடஒதுக்கீடு) இழைக்கிறீர்கள்?" என்று கேட்டார். இடஒதுக்கீட்டை கைவிடக் கோரிக்கை வைத்தார்.
சாகு பொறுமையாக அபயங்கள் சொல்வதைக் கேட்டார். பிறகு வாருங்கள் பேசிக்கொண்டே ஒரு முக்கிய இடத்துக்குக் செல்வோம் என வழக்கறிஞரை தன் குதிரைலாயத்திற்கு அமைத்துக் சென்றார். குதிரைகளுக்கு அது தீவனம் வைக்கும் நேரம். ஒவ்வொரு குதிரையின் வாயோடு தீவனம் வைக்கப்பட்ட கூடை பிணைக்கப்பட்டிருந்தது. அது அது அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தன. மகாராஜா எல்லா குதிரைகளின் முகத்தில் பிணைக்கப்பட்ட தீவனக் கூடைகளை கழட்டச்சொன்னார். பணியாளர்கள் உடன் கழட்டினர். இப்போது ஒரு விரிப்பை விரித்து அதில் தீவனத்தை கொட்டக் சொன்னார். பின் ஒரே நேரத்தில் குதிரைகளை அவிழ்த்துவிடச்சொன்னார்.
குதிரைகள் பாய்ந்து கொண்டு விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஓடின. வலிமையான குதிரைகளும் வளர்ந்த குதிரைகளும் பாய்ந்து ஓடி விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஆரம்பித்தன. நலிவுற்ற வலிமையற்ற குதிரைகள் தீவனத்தை உண்ண முயன்றும் வலிமையான குதிரைகள் நெட்டித் தள்ளியும் பின்னங்கால்களால் உதைத்தும் வலிமையற்றவையைத் துரத்தின.சிறிது நேரத்தால் நோஞ்சான் குதிரைகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு ஒதுங்கி அமைதியாக நின்று தீவனத்தையே பார்த்தவண்ணம் இருந்தன. இதை எல்லாம் பார்ப்பன வழக்கறிஞர் அபயங்கர் பார்த்தார்.
இப்போது அபயங்கரிடம் சாகு மகாராஜா பேசத்தொடங்கினார். திரு.அபயங்கர், என்ன செய்யலாம் ? வலிமையற்ற குதிரைகளை சுட்டுக்கொன்றுவிடலாமா? அப்படி செய்வது சரியா? அதனால்தான் நான் எவ்வொரு குதிரைக்கும் அதற்கான தீவனத்தை அது மட்டுமே உண்ணும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்த ஏற்பாடு இல்லாமல் இப்போது பார்த்தோமே அது போல் தீவனத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு அனைத்து குதிரைகளுக்கும் போட்டியை உருவாக்கினால் வலிமையான குதிரைதான் ஜெயிக்கும். வலிமை இல்லாதது பட்டினி கிடக்கும். இதற்கு மாற்றாக நான் எவ்வொரு குதிரைக்கும் உரிய தீவனத்தை உத்ரவாதப்படுத்தும் ஏற்பாட்டுக்குப் பெயர்தான் இடஒதுக்கீடு.
இந்த விலங்குகளுக்கான ஏற்பாட்டை நான் என் குடிமக்களுக்கு செய்கிறேன். நீங்கள் (பார்ப்பனர்கள்) மனிதர்களில் சாதியை உருவாக்கி சூத்திரர்களையும் ஆதி சூத்திரர்களையும் காலங்காலமாக விலங்குகளைப்போல நடத்தி வந்துள்ளீர்கள். இப்போது அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையைப் பெற அவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன்" என்றார். அபயங்கரால் எதுவும் பேசமுடியவில்லை. மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டார்.

ஜூலை 26,வரலாற்றில் இன்று. கார்கில் வெற்றி தினம் இன்று
ஜூலை 26,
வரலாற்றில் இன்று.
கார்கில் வெற்றி தினம் இன்று
..
1999இல் மே முதல் ஜூலை வரை பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் மாநிலம் கார்கில் வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து அவர்களை எதிர்த்து போரிட்டு இந்தியப் பகுதியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அனைவரையும் விரட்டியடித்தனர். ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடந்த அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். அதன் நினைவாக ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.
நாட்டை காக்க போரிட்டு, உயிர்த்தியாகம் செய்த 527 வீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

சனி, 25 ஜூலை, 2020
*ஆசிரியர் துணைவன்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நிறுவனர்; ஆசிரியர் இனக் காவலர்,பாவலர். க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc, அவர்களின் மறைவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் துணைவன் இதழில் PDF ல் வெளியிடப்படுகிறது.*
*ஆசிரியர் துணைவன்*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*
*நிறுவனர்; ஆசிரியர் இனக் காவலர்,பாவலர். க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc*. *அவர்களின்* *மறைவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்* *துணைவன் இதழில்*
*PDF ல் வெளியிடப்படுகிறது.*
*கொரானா தொற்று குறைவுக்கு பின்னர்* *துணைவன் ஏடு அச்சிடப்பட்டு அனைவருக்கும்* *அனுப்பிவைக்கப்படும், இந்த PDF ல் விடுப்பட்ட படங்கள் அடுத்த இதழில் வெளிவரும்*
_____________
*இங்ஙனம்,*
*மாநிலத் தலைவர் முனைவர்.*
*மன்றம். நா.சண்முகநாதன்.*
*மாநில துணை பொதுச் செயலாளர்*
*இலா.தியோடர் ராபின்சன்*
*பொருளாளர்*
*அம்பை ஆ கணேசன்*

வெள்ளி, 24 ஜூலை, 2020
வியாழன், 23 ஜூலை, 2020
பருவத்தேர்வுகள் இரத்தாகிறது!*இறுதியாண்டு இல்லாத மாணவர்களுக்கான செமச்டர்கள் ரத்து
*பருவத்தேர்வுகள் இரத்தாகிறது!*
*இறுதியாண்டு இல்லாத மாணவர்களுக்கான செமச்டர்கள் ரத்து.*
*கல்லூரிகளில் நடப்பு பருவதேர்வுக்கு மட்டும் விலக்களிக்க அனுமதி.*
*யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் - முதலமைச்சர்.*
*இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நடப்பு பருவத்தேர்விலிருந்து விலக்கு.*
*முதுகலைப் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்தப் பருவத்திற்கு தேர்வில் இருந்து விலக்கு.*
*இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.*
*முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.*
*எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)