திங்கள், 15 மார்ச், 2021

*🏮சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?*

*🏮சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?*
 
*LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ?*

 
 *கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது.*


*மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும்.*


*ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை.*


*ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்.*
  

 *முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும்,*


*அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.*

*உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும்.*


*அதில்  TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்க்கு  சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.*

*மேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்க்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம்.*

  
 *மேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,*
*மேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம்.*

 *இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்த்கம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள்.*

*🎫பான் - ஆதார் இணைத்து விட்டீர்களா? தெரிந்து கொள்ள இதைச் செய்யுங்க! இணைக்கா விட்டால். கார்டு காலாவதிதான்!*

*🎫பான் - ஆதார் இணைத்து விட்டீர்களா? தெரிந்து கொள்ள இதைச் செய்யுங்க! இணைக்கா விட்டால். கார்டு காலாவதிதான்!*


*ஆதார் எண் - பான்* *எண்னை இணைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய பக்கம்*
*பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.* *அவ்வாறு இணைக்காவிட்டால் 3 நாட்களுக்குப் பிறகு, பான் எண் காலாவதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.*

 
*பெர்மெனண்ட் அக்கவுண்ட் நம்பர் எனப்படும், நிரந்தரக் கணக்கு எண் ஒருவரது அனைத்து விதமான நிதிப் பரிமாற்றங்களையும் பதிவு செய்யும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் சிலர் வணிக ரீதியாக வரிகளில் இருந்து தப்பிக்கும் பொருட்டும், சிலர் அது ஏதோ கிரெடிட் கார்டு போலானது என்ற அறியாமையிலும் இரண்டு மூன்று கார்டுகளுக்கு மேல் பெற்று, ஏமாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், ஒரு பான் கார்டுடன் ஒருவரது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.*


*இதன் மூலம், ஒருவர், ஒரு கணக்கு, ஒரு பான் கார்டு, ஒரு ஆதார் எனக் கொண்டுவந்தால், முறைகேடுகள் தடுக்கப் படும் என்று கூறுகிறது.*

*எனவே இந்த இரண்டு கார்டுகளையும் மத்திய நேரடி வரிகள் விதிப்பின் வருமான வரி இணையத்தில் அனைவரும் இணைக்க வேண்டும் என்று கெடு கொடுத்து வந்தது. இந்தக் கெடு சில முறை நீட்டிக்கப் பட்டும் வந்தது.*

*இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால், அக்டோபர் 1ஆம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடி ஆகாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது. அதன் பிறகு பழைய கார்டு காலாவதியாகி, புதிதாக ஒரே ஒரு பான் கார்டுதான் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.*

*வங்கியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பான் கார்டு அவசியம். பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை மேலும் ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட கணக்காகக் கொண்டு வர, பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினர். கால அவகாசம் நீட்டிக்கப் படும் பலர் அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். இருப்பினும், இதற்கு மேலும் கால அவகாசம் நீட்டிக்கப் பட வாய்ப்பில்லை என்பதால், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டு காலாவதியாகிவிடும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.*

*இது கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக சொல்லப் பட்டு வருவதால், சிலர் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்திருப்பார்கள். அவர்கள் தற்போது தங்கள் பான் எண், ஆதாருடன் இணைக்கப் பட்டு விட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?*


*பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?*

*https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng - என்ற வருமானவரித்துறையின் இணையப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள்.*

*இதில் பான், ஆதார் எண், ஆதாரில் உங்களின் பெயர், கேப்ட்சா ஆகியவற்றைப் பூர்த்தி செய்யுங்கள்.*

*தொடர்ந்து, Link Aadhaar என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.*

*இதை அடுத்து உங்கள் ஆதார் எண், பான் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும். அதற்கான செய்தியும் அதில் வந்துவிடும்.*
 

*நீங்கள் ஏற்கெனவே இரண்டையும் இணைத்திருந்தால், இந்தப் பக்கத்திலேயே மேல் புறத்தில் அதற்கான செய்தி வரும். அதன்மூலம் நீங்கள் ஆதார் - பான் கார்டை இணைத்துவிட்டதை அறிந்துகொள்ளலாம்.*

📮அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 9 சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!*

*📮அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 9 சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!*


*திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றிழைக்கப்படும் பிபிஎப், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா என ப்படும் செல்வ மகள் திட்டம் மற்றம் சில திட்டங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை என ஒவ்வொரு காலாண்டும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது.*

  
*இந்த வட்டி விகித மாற்றமானது அரசு பத்திரங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாயினைப் பொருத்து அளிக்கப்படுகிறது. எனவே தபால் நிலயத்தில் வழங்கப்படும் 9 வகையான சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.*


*தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதுவும் வங்கிகளில் 3.5 சதவீதம் மட்டுமே லாபம் அளிக்கும் நிலையில் தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் வைத்துக் கணக்கை துவங்கும் போது செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும். சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும்.*


*5 வருட தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள் தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஒரு வருடத்திற்கு 7.3 சதவீதம் லாபம் அளிக்கிறது. குறைந்தபட்சம் மாதம் 10 ரூபாய் எனவும் சேமிப்பினை தொடர அனுமதி அளிக்கிறது. ஆனால் வங்கிகளில் குறைந்தபட்சம் 500 ரூபாய் என டெபாசிட் செய்ய வேண்டும். எனவே இது பள்ளி குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தினைக் கற்றுக்கொடுக்கு ஏற்றதாக இருக்கும்.*


*போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கு போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. தற்போது ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை வட்டி விகிதம் எப்படி அளிக்கப்படுகிறது என்று இங்குப் பார்க்கலாம். 1 வருட கணக்கு: 6.9% 2 வருட கணக்கு: 7.0% 3 வருட கணக்கு: 7.2% 5 வருட கணக்கு: 7.8% அதிகபட்ச டெபாசிட் வரம்பு என்று ஏதுமில்லை. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.*


 *தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்ச்ம் வரை டெபாசிட் செய்யலா. இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் கணக்கு திறக்கும் போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். முதிர்வு காலம் 5 வருடம். ஒரு வருடத்திற்குப் பிறகு தேவைப்பட்டால் முன்கூடியே பணத்தினை எடுத்துக்கொள்ளலாம்.*


*மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு கால,ம் 5 வருடம். ஆண்டுக்கு 8.7 சதவீத லாபத்தினை அளிக்கிறது.*


*பிபிஎப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5,00 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக ல்லது 12 மாத தவணையாகவும் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்ய முடியும். டெபாசிட் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் ஆனால் வட்டி வருவாய்க்குச் செலுத்த தேவையில்லை.*


*5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் 5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. இன்று 100 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 5 வருடத்திற்குப் பிறகு உங்களுக்கு 144.23 ரூபாய் கிடைக்கும். அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை. வரி விலக்கு அளிக்கப்படுகிறது.*


*கிசான் விகாஸ் பத்ரா:*

  
*கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆண்டுக்கு 7.7 சதவீத வட்டி விகித லாபத்தினை அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் 118 மாதம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்றும் ஏதும் கிடையாது. பெரியவர்கள் அல்லது மைனர் என யார் பேரில் வேண்டும் என்றாலும் இந்தத் திட்டத்தில் பத்திரதிட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.*


*சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக இந்தச் செல்வ மகள் திட்டம் இருக்கிறது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யத் துவங்கி 15 வருடம் வரை தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் தற்போது 8.5 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் வரி விலக்கும் பெற முடியும். ஆண்டுக்கு அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.*

ஞாயிறு, 14 மார்ச், 2021

✍️ஏப்ரல் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மார்ச் 31க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவு.பருவத் தேர்வுகளை மார்ச் 31க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.*

*✍️ஏப்ரல் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மார்ச் 31க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவு.பருவத் தேர்வுகளை மார்ச் 31க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.*

*ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.*


 *கொரோனா தொற்றால், இந்த கல்வி ஆண்டு முழுதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.*


*கொரோனா தாக்கம் குறைந்ததால், ஜன., 19 முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கும்; பிப்., 8 முதல், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கும் நேரடி வகுப்புகள் துவங்கின.*


*இந்நிலையில், பிளஸ் 2வுக்கு மட்டும், மே 3ல் பொதுத் தேர்வு துவங்கும் என, அறிவிக்கப்பட்டது.*

*ஒன்பது முதல், பிளஸ் 1 வரை, பொதுத் தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவருக்கும், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது.*

*தேர்வு ரத்தானாலும், பாடங்களை நடத்தி முடிப்பதற்காக, வாரத்தின் ஆறு நாட்களும் பள்ளிகள் இயங்குகின்றன.*


*ஒன்று முதல், எட்டு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும், ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.*


*இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 6ல் நடக்க உள்ளதால், அனைத்து பள்ளி வளாகங்களும் ஓட்டுச் சாவடி பணிக்கு, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.*


*இதன் காரணமாக, அனைத்து பள்ளிகளிலும், மார்ச் 31க்கு பின், கோடை விடுமுறையை அறிவிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.*


 *இதற்காக, வரும் 22ம் தேதி முதல், பிளஸ் 2 தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், பருவ தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.*


*பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், தேர்தலுக்கு பின் பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.*


 *மற்ற வகுப்புகளுக்கு ஏப்., 1 முதல் கோடை விடுமுறை விடுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.*

நீட் தேர்வு 2021 - தேதி அறிவிப்பு... NEET EXAM 2021 - DATE ANNOUNCED...

நீட் தேர்வு 2021 - தேதி அறிவிப்பு...

 NEET EXAM 2021 - DATE ANNOUNCED...


*🗳️அஞ்சல் வாக்குச் சீட்டு படிவங்களும்,அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது பற்றிய முறைகளும் பற்றிய குறிப்புகள்.*

*🗳️அஞ்சல் வாக்குச் சீட்டு படிவங்களும்,அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது பற்றிய முறைகளும் பற்றிய குறிப்புகள்.*



*🗳️அஞ்சல் வாக்குச் சீட்டு படிவங்கள்.

அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது பற்றிய முறைகளும் பற்றிய குறிப்புகள்.

ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் தேர்தல் கால குறிப்புகள்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,நாமக்கல் மாவட்டம்(கிளை).

அன்பானவர்களே!வணக்கம்

சட்டமன்றப்பொதுத்
தேர்தல் -2021 இன் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் பணி சிறப்புற அமைந்து சனநாயகம் முழுவெற்றி பெற்றிடும் எனும் நம்பிக்கைக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நடைபெறும்  குமாரபாளையம்,
திருச்செங்கோடு,
இராசீபுரம்,
சேந்தமங்கலம் ,நாமக்கல் மற்றும் ப.வேலூர் பயிற்சிமுகாமில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப் பொறுப்பாளர்கள் ,
மன்ற
முன்னோடிகள் தங்களுக்குள் சந்தித்து கலந்துப்பேசி ,
ஒருமித்த முடிவெடுத்து தேர்தல் பயிற்சி வகுப்பின் பொறுப்பு அலுவலர் மற்றும் சட்டமன்றத்தொகுதி  தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கோரிக்கைகளை வலுவாக வலியுறுத்துங்கள்.
ஆசிரியப்பெருமக்களுக்கும்,அரசு ஊழியர் பெருமக்களுக்கும் கோரிக்கையின்  நியாயத்தை வலியுறுத்துங்கள்.
ஒற்றுமைப்படுத்துங்கள்.

1)கொரோனாகால நிலையான வழிமுறைகளின் படி பயிற்சி வகுப்பறைகள் இருத்தல் வேண்டும்.
வெப்பமாணி,
கைகழுவும் திரவம்,
சமூக இடைவெளியுடன் இருக்கை வசதிகள் ,காற்றோட்டமான வகுப்பறை ,முக உறை,
ஒரு டீம் ஒரு  தனித்தாளில் வருகைப்பதிவினை  செய்திடும் வகையிலான ஏற்பாடுகள் போன்ற இவைகளை முதலில் பயிற்சி வகுப்பறையில் இருப்பதை  உறுதிப்படுத்திடக்கொள்ளுங்கள்.
இல்லையெனில் வலியுறுத்திக் கோருங்கள்.

2)தூய்மையான-
பாதுகாப்பான குடிநீர் வசதிகள், 
கிருமிநாசினியால் தூய்மைப்படுத்தப்பட்ட சுகாதாரமான தேவைக்கேற்ற  எண்ணிக்கையிலான கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்திடுமாறு கோருங்கள்.

3)பயிற்சி வகுப்பில் சிறு, சிறு இடைவேளைகள்  தந்து  தேநீர்,ரொட்டிகள்,பழச்சாறுகள் போன்றன பங்கேற்றுள்ள அலுவலர்கள் அனைவருக்கும் கூட்ட நெரிசல் இன்றி வழங்கப்படல் வேண்டும் என்பதைக்கோருங்கள்.

4)முழுநாள் பயிற்சி வகுப்பு என்பதை மறுபரிசீலினை செய்திடுமாறு  கோருங்கள்.
மதியநேரத்திற்கான தரமான உணவிற்கான ஏற்பாட்டினை கோருங்கள்.

5)இவைகள் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது,முதன்மையானது  அஞ்சல் வாக்குச்சீட்டுக்கான கோரிக்கையாகும்.
இதற்கான ஏற்பாடுகள் என்ன?என்பதை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்து ,அந்தப் பணிகளை சிறப்பானத் தாக்கிடுமாறு கோருங்கள் . ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் அஞ்சல் வாக்கு செலுத்துவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்துள்ள ஏற்பாட்டை விளக்கிச்சொல்லியும்,தெரிவித்தும்  எல்லோரும்  அஞ்சல் வாக்குச்சீட்டு பெற்று வாக்குச்செலுத்தும் சனநாயகக்கடமைக் கான பணிகளை எடுத்துரையுங்கள்.
நூறு சத அஞ்சல் வாக்குப்பதிவு என்பதை உறுதிப்படுத்திடுமாறு வேண்டுகோள் வையுங்கள்.

6)தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கண்ணியத்துடன்,
மரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

7)ஏதேனும்,சந்தேகம் ,
அச்சம் ஏற்படின், விளக்கம்தேவைப்படின்   மாவட்டச்செயலாளர்
,மாநிலச்செயலாளரை தொடர்புக்கொள்ளுங்கள்.
நன்றி!

இப்படிக்கு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை)

வியாழன், 11 மார்ச், 2021

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் நிதிமுறைகேடுகளை எதிர்த்து 17.03.2021 அன்று சுவரொட்டி இயக்கம் நடைபெறுகிறது.சுவரொட்டியை தயாரித்து , தேவையெனில் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்று மாவட்டம் முழுதும் சுவரொட்டி இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திடுவதற்கு ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு பணிகளை தொடங்கி உள்ளது.

கோரிக்கை மனு இயக்கம் வெற்றிகரமாக நடந்தேறியது!
++++++++++++++++++++
அன்பானவர்களே! வணக்கம்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளை முறைப்படுத்தி சங்கத்தினை- சங்க உறுப்பினர்களை பாதுகாத்திடுதல், 
நிதிஇழப்புத் தொகையினை சங்கச் செயலாளரிடம் இருந்து முழுமையாக வசூல் செய்திடுதல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசும், தமிழக கூட்டுறவுத்துறையும் நிறைவேற்றிட வலியுறுத்தி கடந்த 06.03.2021 அன்று ஏழுகட்டத்தொடர் நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் , நாமக்கல் மாவட்ட அமைப்பு அறிவித்தது.

இதனடிப்படையில் ,
10.03.2021அன்று 
தமிழ்நாடு தலைமைத்தேர்தல் ஆணையாளர்,
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அரசு முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு கூட்டுறவுப்பதிவாளர்,நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்,
நாமக்கல் கூட்டுறவு சரக துணைப்பதிவாளர், எருமப்பட்டி கூட்டுறவு சிக்கன நாணயச்சங்க நிர்வாகக்குழுத் தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, எதிர்வரும் 17.03.2021அன்று சுவரொட்டி இயக்கம் நடைபெறுகிறது.
சுவரொட்டியை தயாரித்து , தேவையெனில் தேர்தல் ஆணையத்தின்  அனுமதிப் பெற்று மாவட்டம் முழுதும் சுவரொட்டி இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திடுவதற்கு மாவட்ட அமைப்பு பணிகளை தொடங்கி உள்ளது.

கூட்டுறவுச் சங்கம் காக்கும் ஏழுக் கட்டத் தொடர்நடவடிக்கைகளுக்கும்  அனைத்து தரப்பினரின் ஆதரவினையும் மாவட்டமைப்பு வேண்டுகிறது.
நன்றி!

-மெ.சங்கர்.

*🗳️தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள், 2021 - EPIC இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்!!!*

*🗳️தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள், 2021 - EPIC இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்!!!*

*🗳️தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13ஏ-ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து பிரிவு ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.*

*🗳️தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13ஏ-ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து பிரிவு  ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அரசிதழில் அறிவிக்கை  வெளியிட்டுள்ளார்.*