வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

முன்மழலையர் வகுப்பு இடைநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் -* *நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 ம் நாள் நடைபெற்ற கலந்தாய்வில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் - கலந்தாய்வு இரத்து செய்து மறுகலந்தாய்வு நடத்த ஆசிரியர் மன்றம் கோரிக்கை!



 

நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 ம் நாள் நடைபெற்ற கலந்தாய்வில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் - கலந்தாய்வு இரத்து செய்து மறுகலந்தாய்வு நடத்த ஆசிரியர் மன்றம் தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை!

 நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 ஆம் நாள் கலந்தாய்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு, 23.02.2022 அன்று முறையான வகையில் மறுகலந்தாய்வு நடத்திட‌ல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு ‌தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்! -------------------------------------------- நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 அன்று நடைபெற்ற முன்மழலையர் வகுப்பு ஆசிரியர்‌ கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் காட்டப்படாமல் (eligible vacant place) கலந்தாய்வு இடமாறுதல் நடந்தப்பட்டு உள்ளது என்று ஆசிரியர்கள்‌ குற்றம்‌ சாட்டுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சில ஒன்றிய ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் (eligible vacant place) காட்டப்படாமல் கலந்தாய்வு நடத்தப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் கலந்துக் கொண்டுள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் தேவை பணியிடங்கள் (need post) மட்டும் காட்டப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறாக முறையற்ற முறையில் இடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்தகு நடைமுறை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளுக்கு‌‌ நேர் விரோதமானதாகும். இடமாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொண்டுள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் (eligible vacant place) காட்டப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட வேணடும்‌ என்று கோரியதன் காரணமாக ஒரு சில ஒன்றியங்களில் இடமாறுதல் கலந்தாய்வு 23.02.2022 அன்று நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.இத்தகு நடைமுறை வரவேற்கத்தக்கதாகும் ஆனாலும், பாகுபாடுகள்‌‌ நிறைந்ததாகும். ஒரு வருவாய் மாவட்டத்தில் இரண்டு வேறு வேறு வகையான‌ முறைகளில் கலந்தாய்வு என்பது ஏற்கதக்கது ஆகாது. நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் ஒன்றியங்களுக்கு ஏற்றவாறு வேறு‌ வேறு வகையான‌ நடைமுறைகள்- அனுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு இருப்பது ஆசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தந்துஉள்ளது. ஒரே சீரான‌ முறையில் 17.02.2022 அன்று நாமக்கல் மாவட்டத்தில் முன்மழலையர்‌ வகுப்பு இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறவில்லை என்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் குற்ற்ம்‌ சாட்டுகின்றனர். தாங்கள், மேற்கண்டவற்றை கனிவுடன்‌ பரிசீலித்து நாமக்கல் மாவட்டத்தில் 17.02.2022 அன்று நடைபெற்ற முன்மழலையர் வகுப்பு கலந்தாய்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு , 23.02.2022 அன்று முன்மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு எவ்விதமான பேதமும் - பாகுபாடுகளும் அற்ற வகையில் காலிப்பணியிடங்கள் (eligible vacant place) மற்றும் கூடுதல் தேவை. பணியிடங்கள் (additional Need place)‌ தொகுத்து முன்கூட்டியே வெளியிடப்பட்டு இணையவழியில் மறுகலந்தாய்வு நடத்தப்படும் வகையில் வழிவகை கண்டு உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌நாமக்கல் மாவட்டம் அமைப்பு வேண்டுகிறது


புதன், 16 பிப்ரவரி, 2022

வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்கு சீட்டுகளை விரைந்து அளித்திடல் வேண்டும் - ஆசிரியர் மன்றம் கோரிக்கை



 

பெருமாநகராட்சி/மாநகராட்சி/நகராட்சி /பேரூராட்சி பகுதிகளின் நடுநிலைப் பள்ளிகள் நகர்புறத்தேர்தலுக்கு அவசியமான‌‌ -தேவையான தளவாடங்கள்‌ தொகுத்து ஒப்படைத்திடும் நாள்! நடுநிலைப் பள்ளிகளின் முன்மழலையர் வகுப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாள்! இடைநிலை ஆசிரியர்களின்‌ பணியிடநிரவல் கலந்தாய்வு நாள்! வரையறுக்கப்பட்ட‌விடுப்பு நாள்! இந்தப்பயிற்சியை கொஞ்சம் ஒத்திவைக்கலாமே!?



சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 வழக்கறிஞர்களுக்கு பணிநிலை உயர்வு அளித்து உச்சநீதிமன்ற கொலிஜியம் அறிவிப்பு


 

கொரோனா சிறப்பு விடுப்பு சார்ந்த சுற்றறிக்கை


 

உள்ளாட்சி தேர்தல் - 19.02.2022 அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை மற்றும் 18.02.2022 தேர்தல் பணியில் 50 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடுவதற்கு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.


 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட மருத்துவக்குழு மாற்றியமைப்பு எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழுவை மாற்றியமைத்து மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் குழு அமைத்து உத்தரவு


 

LKG UKG மீள ஈர்த்தல் கலந்தாய்வில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவை உள்ள பணியிடத்தில் மேற்காண் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு மீள ஈர்த்துக்கொள்ளப்பட்டது போக மீதமுள்ள ஆசிரியர்களை அவர்கள் ஏற்கனவே பணிபுரியும் பள்ளிகளிலேயே 1 முதல் 5 வகுப்புகள் வரை பாடம் போதிக்க அனுமதிக்கலாம்.. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்/நாள்:15.02.2022



 

தொடக்கக் கல்வி _ 2022 பொதுமாறுதல் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு EMIS ல் Date of Joining in President post ல் குறித்த விவரங்கள் பதிவேற்ற இயக்குநர் செயல்முறைகள் 16.02.2022