திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் சந்திப்பு!வாழ்த்து! ++++++++++++++++++++++ தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் திரு. ஐ.லியோனி அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் இன்று (09.03.2022) சந்தித்தார்கள். திண்டுக்கல் திரு.லியோனி அவர்களின் பணிகள் சிறக்க ஆசிரியர் மன்றத்தின் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன்அவர்களின் பிறந்தநாளினை அறிந்துக் கொண்டுள்ள திரு.ஐ.லியோனி அவர்கள் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு மகிழ்வுடன் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்தார்கள். -மாநில அமைப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
புதன், 9 மார்ச், 2022
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் சந்திப்பு!
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் சந்திப்பு! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.அறிவொளி அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் இன்று(09.03.2022) சந்தித்தார்கள். மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் ஆசிரியர் கோரிக்கைகள் குறித்து எடுத்துவைத்தார்கள். கோரிக்கைகளின் நியாயம் உணர்ந்து நிறைவேற்றுவதற்கு ஆவன செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் நம்பிக்கைத்தந்தார்கள். மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம்.திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதை தெரிந்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்கள். -மாநில அமைப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
செவ்வாய், 8 மார்ச், 2022
க்ருப்ஸ்கயாவின் 'உழைக்கும் மகளிர்' - தமிழில் - கொற்றவை மகளிர் நிலைமைகள் பற்றிய ஆய்வு
க்ருப்ஸ்கயாவின் 'உழைக்கும் மகளிர்' - தமிழில் - கொற்றவை மகளிர் நிலைமைகள் பற்றிய ஆய்வு உழைக்கும் மகளிர் என்ற இந்த ஆய்வறிக்கை 1898 ஆம் ஆண்டு தோழர் க்ருப்ஸ்கயாவால் எழுதப்பட்டு, 1901 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ருஷ்யப் புரட்சியின் வெற்றிக்கு முன்பும் பின்பும் அதன் விளைவுகளில் பாரிய பங்களிப்பைச் செலுத்திய தோழர் க்ருப்ஸ்கயா பெண் விடுதலைக்கான பேராட்டத்தைத் தீவிரப்படுத்தியவர் என்றே நினைவுகூறத்தக்கவர். சிறந்த கல்வியாளரான இவர் ருஷ்ய சோசலிச அரசின் கல்வித்துறையில் உயரிய பொறுப்புகளை வகித்ததன் மூலம் ருஷ்ய சோசலிச சமூகத்தின் நல்ல பல விளைவுகளுக்குக் காரணமானவராகவும் இருந்திருக்கிறார். இவருடைய உழைக்கும் மகளிர் என்ற அறிக்கை தோழர் கொற்றவையின் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சிறுநுாலாக வெளிவந்திருக்கிறது. மார்க்சியத்தளத்தில் இயங்கிவரும் கொற்றவை, மார்க்சியத்தில் பெண்களுடைய வரலாற்றுப் பங்களிப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கோடு முனைந்து செயலாற்றி வருபவர். அதன் தொடர்செயல்பாடாக க்ருப்ஸ்கயாவின் இந்த அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த அறிக்கை, புரட்சிக்கு முந்தைய ஜார் மன்னனின் ஆட்சிக்காலத்தில் ருஷ்யப் பெண்களின் வாழ்நிலையை மூன்று வகையான பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்துகிறது. அவர்களுடைய உழைப்பு எவ்விதம் சுரண்டப்படுகிறது என்பதை நிறுவி பெண்ணடிமைத்தனத்துக்கான மூலகாரணங்களை விவாதப் பொருளாக்குகிறது. இறுதியாக அவர்களுடைய விடுதலைக்கான பாதையையும் தெளிவுபடுத்துகிறது. முதலில், உழைக்கும் வர்க்க அங்கத்தினராக மகளிர் நிலைமைகள் ஆய்வுசெய்யப்படுகின்றன. ஜாரின் ஆட்சியில் மிகுந்த துயரங்களுக்குள்ளான விவசாயக் குடும்பங்களின் வாழ்நிலைகள் பேசப்படுகின்றன. விவசாய வேலைகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் உழைப்பைச் செலுத்துவதையும் அவர்களின் இன்னல்களும் ஆழமாகப் பதிவுசெய்யப்படுகின்றன. விவசாயத்தின் நிச்சயமற்ற தன்மை உழைக்கும் மக்களை குடிசைத் தொழில்களான கைவினைத் தொழில்களில் ஈடுபட நிர்பந்திக்கின்றது. கைநெசவு, தோல் பதனிடுதல், மட்பாண்டம் செய்தல், விளக்குத் தயாரித்தல், ஆணிகள் செய்தல், வெட்டுக் கருவிகள் செய்தல் போன்ற தொழில்களில் மொத்தக் குடும்பமும் குறைந்தது 18 மணி நேரம் ஈடுபடுகிறது. சம்மட்டி அடிப்பது, களிமண் மிதிப்பது போன்ற கடினமான வேலைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வேலையின் தீவிரமும் 18 மணி நேரச் சோர்வும் ஏழ்மையின் காரணமாக ஆரோக்கியக்குறைவும் அவ்வகை வேலைகளில் ஈடுபடும் பெண்களை உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு துயரங்களுக்கு உள்ளாக்கியிருக்கும் என்பதை இந்த நுாலை ஆழ்ந்து வாசித்து உள்வாங்கும் யாவரும் உணர்ந்து கொள்ள முடியும். கிராமங்களில் அதிகரிக்கும் ஏழ்மை விவசாயக் குடிசைத்தொழிலாளியை நகரத்தை நோக்கி நகர்த்துகிறது. அங்கு குடிசைத் தொழிலாளிகள் தொழிற்சாலைத் தொழிலாளிகளாக உருமாற்றம் பெறுகிறார்கள். ஆண் தொழிலாளிகளுடன் பெண் தொழிலாளியும் உடனிணைகிறாள். அங்கு அவளுக்கு அடுத்த துயர் காத்துக்கொண்டிருக்கிறது. ஆண் தொழிலாளியை விட பெண் தொழிலாளிக்கு கூலி குறைவாகவே கொடுக்கப்பட்டு அவளுடைய உழைப்பு மிகுசுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது. அதிலும் தனித்து வாழும் பெண்களுக்கு குறைவான கூலி என்பது பலவகையான போதாமைகளை உருவாக்குகிறது. மோசமான உணவு, ஆரோக்கியமற்ற இருப்பிடச்சூழல் போன்ற பல காரணங்களால் அவள் நோய்வாய்ப்பட நேருகிறது. அவள் தன் அன்றாடப் பொருளாதாரத் தேவைகளுக்காக விபச்சாரம் என்ற கொடும் துன்பத்துக்குள் தள்ளப்படுகிறாள். இரண்டாவதாக, குடும்பத்தில் உழைக்கும் மகளிரின் நிலைமைகள் ஆராயப்படுகின்றன. ஒரு பெண் வெளிச்சூழலால் துன்பப்படுவதும் சுரண்டப்படுவதும் அல்லாமல் தன் குடும்ப உறுப்பினர்களான தந்தை கணவன் என அவளின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலேயே அடிமைத்தனத்துக்கும் துன்பத்துக்கும் உள்ளாக்கப்படுகிறாள். தந்தை தன் மகளை வருமானம் ஈட்டக்கூடிய ஒரு உடமைப்பொருளாகவும் கணவனால் சொல்வதைக் கேட்டு நடக்கும் ஒரு அடிமையாகவும் அவசியமான உழைப்புத்திறனாகவுமே பார்க்கப்படுகிறாள். மூன்றாவதாக, பெண்களும் குழந்தை வளர்ப்பும் என்னும் தலைப்பில் மிக முக்கியமான ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முழுநேரக் குழந்தை வளர்ப்பே பெண்களுக்கு பெரும் சவால் நிறைந்த பொறுப்பு. அதிலும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தமுள்ள தாய்மார்களுக்கு அதன் சுமை இன்னும் கூடுதலாக்கப்படுகிறது. அறிவியல் முறைப்படி குழந்தைகளை வளர்க்காமல் அறியாமையின் காரணமாக மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் மிகுந்த குறைபாடுடையவர்களாகவே இந்தச் சமூகத்தின் அங்கத்தினர்களாக வந்து சேர்வார்கள். குழந்தைகளுடைய ஆரோக்கியம் மற்றும் கல்வி குறித்தான எந்தப் புரிதலும் தாயிடம் இருப்பதில்லை. இந்த மூன்று பகுப்பாய்வுகளுக்குட்பட்ட துயர நிலைகளிலிருந்து பெண்களை விடுவிக்க இருக்கும் ஒரே தீர்வாக பாட்டாளி வர்க்க விடுதலையை தோழர் க்ருப்ஸ்கயா இந்த ஆய்வின் மூலம் முன்வைக்கிறார். பட்டாளி வர்க்க நலன்களிலேயே பெண்களின் நலன்களும் உள்ளடங்கியிருக்கின்றன என்றும் பெண்களை அடிமைப்படுத்துவதும் அவமதிப்பதிப்பதும் தனிச்சொத்துடமையின் கூறுகள் என்பதை உணர்த்தி, உற்பத்திக் கட்டுப்பாடுகள் தனியார் முதலாளிகளிடமிருந்து சமூகத்தின் கைகளுக்கு மாறும் போது எல்லாம் மாறிவிடும் என்று முன்னறிவிக்கிறார். ஆண்களிடமிருந்து கிடைக்கப்பெறும் பாதுகாப்பை அவள் உதறும் போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகிறது என்றும் சுயசார்பான வருமானமே அவளை ஆண்களின் பிணைப்பிலிருந்து விடுவிக்கமுடியும் என்று கூறும் க்ருப்ஸ்கயா, குழந்தைவளர்ப்பும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாக்கப்பட்டு அது முழுமையாக வளர்வதற்கான அனைத்துத் தேவைகளும் நிறைவு செய்யப்படும் போதும், வளர்ந்த பிறகு அவர்களுக்குத் தரமான கல்வி உறுதிசெய்யப்படும் போதும்தான் பெண்கள் அனைத்துக் கட்டுகளிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்பதை உறுதிபட நிறுவுகிறார். இறுதியுரையில் தொழிற்சாலைப்பணியானது பெண்களுக்குச் சுமையைக் கொடுத்தாலும் தொழிற்சாலைகளில் தான் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்து அவளுக்குள் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு, தன் உரிமைகளுக்கான போராட்டத்தை அவளே முன்னெடுப்பாள் என்றும், இதன் மூலம் சோசலிஷ சமூகத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் அவளும் தவிர்க்க இயலா சக்தியாக இணைந்து கொள்வாள் என்றும் முன்னுணர்கிறார். இந்த நுாலின் தற்போதைய பயன்மதிப்பு என்னவென்பதை நாம் உணர்ந்தால் தான் இந்த நுாலை இவ்வளவு காலத்திற்குப் பிறகு தோழர் கொற்றவை தமிழில் மொழி பெயர்க்க வேண்டிய அவசியத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். உலகம் முழுவதிலும் தேச நிற இன மொழி சாதி கல்வி மற்றும் அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி ஆண்களின் கூட்டுஉளவியல் ஒரேபோலச் செயல்படும் ஒரு புள்ளி உண்டென்றால் அது பெண்களை அடிமைத்தளையில் வைத்திருப்பது மட்டுமே. சமீபத்தில் ஒரு ஒப்பீட்டுச் சித்திரத்தைக் காண நேரிட்டது. மனிதனுடைய பரிணாம வளர்ச்சியை உணர்த்தும் அந்தச் சித்திரத்தில் ஆண் குரங்கு படிப்படியாக உருமாற்றம் பெற்று முதுகெலும்பு நிமிர்ந்து தற்போதைய நவீன மனிதவடிவத்துக்கு வந்து சேர்ந்திருப்பது பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த சித்திரத்தை அனேகமாக நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அதன் அருகிலேயே இருந்த இன்னோரு சித்திரத்தில் பெண் குரங்கின் பரிணாம வளர்ச்சி காட்டப்பட்டிருந்தது. பெண் குரங்கு நவீன மனுஷியாகும் வரை தான் அடைந்து வந்த பரிணாமவளர்ச்சியில் எழுந்து நிமிரவே முடியாமல் தவழ்ந்த நிலையிலேயே வளர்ச்சியடைந்து வந்திருக்கும். பெண்களில் இன்றைய நிலையை இதைவிடத் துல்லியமாக எதுவும் விளக்கிவிட முடியாது. இந்தச் சித்திரம் உணர்த்தும் செய்தியின் படி நவீன பெண்கள் வளர்ந்திருக்கலாமே ஒழிய இன்னும் நிமிரவே இல்லை என்பதால் இந்த நுால் இன்னமும் அதன் தேவையை உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது. ருஷ்யப் புரட்சியின் வெற்றிக்குப்பின் நிலைமைகள் மாறிய பிறகு பிறிதொரு பதிப்பின் அறிமுக உரையில் இதையே க்ருப்ஸ்கயா இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘அன்றைய உழைக்கும் மகளிரின் நிலைமைகள் பற்றிய விவரணங்களைப் படிக்கும்போது அங்கிருந்து நாம் இன்று எதுவரை முன்னேறியுள்ளோம் என்ன சாதித்தோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதேவேளை நாம் சாதிக்காதது என்ன, உழைக்கும் மகளிரின் முழுமையான விடுதலைக்காக நாம் இன்னும் தீவிரமாக, விடாப்பிடியாக எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்’ * இந்த நுாலைப்பற்றிய மேற்கண்ட எனது மதிப்புரை 'வணக்கம் இந்தியா' நாளிதழில் வெளியானது. நன்றி: வீரக்குமார்