புதன், 30 நவம்பர், 2022

மெட்ராஸ்‌-ஐ பரவுகிறது ~ கண்‌ நோய்‌ பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்‌ ~ மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல்...

தொடக்கக்‌ கல்வி - நிருவாக சீரமைப்பு - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாற்றம்‌ செய்யப்பட்டது - ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்‌கள் ிபெற்று வழங்க வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு நிதி அதிகாரத்துடன்‌ கூடிய கூடுதல்‌ பொறுப்பு ஆணை வழங்க அறிவுறுத்தியது சார்பு...

கல்வியாண்டு நாட்காட்டி 2022~2023...

click here...

திங்கள், 28 நவம்பர், 2022

மின்‌ இணைப்பு எண்ணுடன்‌ ஆதார்‌ எண்‌ இணைக்க சிறப்பு முகாம்‌ ~ மின்வாரியம்‌ அறிவிப்பு...

அரசு பள்ளிகளில்‌ 15% மாணவர்கள்‌ கற்றலில்‌ பின்னடைவு ~ அடிப்படை கல்வியை மீண்டும்‌ மேம்படுத்த உத்தரவு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்...

ஞாயிறு, 27 நவம்பர், 2022

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) ~ இணைய வழியிலான மாவட்டச் செயற்குழு கூட்ட முடிவுகள்...


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இணையவழியில் 26.11.2022 அன்று பிற்பகல் 06.30 மணிக்கு தொடங்கி 08.00 மணிக்கு நிறைவுபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர்  க.ஆசைத்தம்பி தலைமை தாங்கினார்.

மாவட்டத் துணைச் செயலாளர் வெ.வடிவேலு அனைவரையும் வரவேற்றார்.
 
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கு.பாரதி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கு.தியாகராசன்,  கோ.கு.இராசேசுவரி,
மாவட்ட கொள்கை விளக்கச்
செயலாளர் க.தங்கவேல்  மற்றும் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்டச்செயலாளர் மெ.சங்கர் 
தீர்மான உரை ஆற்றினார். 

மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் இயக்க உரை ஆற்றினார்.

கூட்ட நிறைவில் மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் த.தண்டபாணி நன்றியுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் 
பள்ளிப்பாளையம் ஒன்றியத் தலைவர் பி.கண்ணன் , திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் சி.கார்த்திக்,
மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் மு.இரவி, இராசீபுரம் ஒன்றிய அமைப்பாளர் வே.இலட்சுமி, நாமகிரிப்பேட்டை ஒன்றியத் தலைவர் 
எம்.கே.முருகேசன், ஒன்றியச்செயலாளர் சி.மோகன்குமார், ஒன்றியப் பொருளாளர் கு. கிருஷ்ணன்,  முன்னாள் இலக்கிய அணி துணை அமைப்பாளர் சி.இராசவேல்,
சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் கா.சுந்தரம்,  புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கொ.கதிரேசன்,  நாமக்கல் ஒன்றியச் செயலாளர் து.செந்தில்குமார்,  ஒன்றியப் பொருளாளர் மு.சசிக்குமார்,மேனாள் ஒன்றியச்செயலாளர் அ.செயக்குமார், பரமத்தி ஒன்றியச் செயலாளர் க.சேகர், கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் இர.மணிகண்டன் மற்றும் எருமப்பட்டி ஒன்றியத்தின் முன்னாள் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் நீ.கனகலிங்கம் உள்ளிட்டு 27 பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத்
தீர்மானங்களில் சில : 

1. இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலு அவர்களுக்கு 
 கண்ணீர்  அஞ்சலி செலுத்தப்பட்டது.

2. நாமக்கல் மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின்  சார்பில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 29.11.2022 (செவ்வாய்) பிற்பகல் 05.00 மணியளவில்  நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெறும்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  பெருந்திரளாக பங்கேற்பது என்று முடிவாற்றப்பட்டது.

3. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத் தேர்தலை எதிர்வரும் 24.12.2022 அன்று நாமக்கல்லில் வெகுசிறப்பாக  நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.


4.புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை முழுமையாக இரத்து செய்துவிட்டு  பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு தொடர்ந்திடல் வேண்டும்.

 5. மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கிடல் வேண்டும்.

6.பேரறிஞர் அண்ணா  அவர்களின் ஆட்சி காலத்தில் இருந்து தமிழ்நாட்டின் ஆசிரியர் –அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தமிழக அரசு தொடர்ந்து வழங்கிடல் வேண்டும்.

 7.தமிழ்நாட்டின்  ஆசிரியர் –அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஊதியத்தினை உடனடியாக  வழங்கிடல் வேண்டும்.

8..தமிழ்நாட்டின்  ஆசிரியர் –அரசு ஊழியர்களுக்கு 01-07-2022  முதல் வழங்கப்பட வேண்டிய   4 சதம் அகவிலைப்படி  உயர்வினை  தமிழக அரசு உடன் அறிவித்திடல் வேண்டும்.


 9.புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழக அரசு முழுமையாக ஏற்று நடத்திடல் வேண்டும். காசில்லா – கட்டணமில்லா சிகிச்சை என்பதை தமிழக அரசு உறுதிபடுத்திடல் வேண்டும்.  புதிய மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகளை உடனடியாக வழங்கிடல் வேண்டும்.

10.வாக்குச்சாவடி நிலை அலுவலர் , மைய அலுவலர் பணிகளில் இருந்து பள்ளி ஆசிரியர்களை முற்றிலுமாக  விடுவித்திடல் வேண்டும். தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை அலுவலர்களையும்  வாக்குச்சாவடிநிலை அலுவலர் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்


11. தேர்வு நிலை/ சிறப்பு நிலை  ஊதிய நிர்ணய ஆணைகளை நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரிடம்  (தொடக்கக்கல்வி)
இருந்து ஒன்றிய ஆசிரியர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் விரைந்து  பெற்று வழங்கிட முன்வரல் வேண்டும். பணப்பயன்களை தாமதமின்றி அனுமதித்திடல் வேண்டும்.

12.பணிவரன்முறை ஆணைகளை நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலரிடம் (தொடக்கக்கல்வி) இருந்து விரைந்து பெற்று வழங்கிடுவதற்கு மாவட்டத்தின் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும்‌ ஆவன செய்திடல் வேண்டும்.

13.ஆசிரியர் வைப்புநிதி  முன்பணம்/பகுதி இறுதித் தொகை ஆகியவற்றை கோரும் ஆசிரியர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் உடனுக்குடன் அனுமதித்திடல் வேண்டும். தேவையற்ற காலதாமதம் செய்து ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதை கைவிடல் வேண்டும்.

14.ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்குவதற்கு, தேர்வுநிலை- சிறப்புநிலை ஊதியம் நிர்ணயம் செய்வதற்கு ஆசிரியர்களின் கல்வித்தகுதி சான்றுகளின் உண்மைத்தன்மைச்
சான்றுகளை கட்டாயப்படுத்தி கோருவதை- தேவையற்ற காலதாமதம் செய்வதை  நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கைவிடல் வேண்டும்.


15.ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் உரிய பதிவுகள் பதியப்பட்டு பணிப்பதிவேடு  பராமரிக்கப்பட்டு வரும்நிலையில்  தேர்வுநிலை -சிறப்புநிலை ஊதிய நிர்ணய ஆணைகள் வழங்கப்படுவதற்கும், பணிவரன்முறை ஆணைகள் வழங்கப்படுவதற்கும் 
தொடக்க மற்றும்  நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் முன்மொழிவுகள் -கருத்துருக்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பக்கங்களை நகலெடுத்து கோப்புகள் தயாரித்து தருமாறு அலைக்கழிக்கப்பட்டு வருவதும், கைப்பணம்‌ செலவழிக்கப்படச்
செய்யப்படுவதும் தடுக்கப்பட்டு,
காகிதமில்லா  அலுவலக நடைமுறையை பின்பற்றுமாறு நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து வட்டாரக்கல்வி
அலுவலர்களுக்கும் வழிகாட்டுதல் வழங்கிடுமாறு மாவட்டக் கல்வி அலுவலரை (தொடக்கக்கல்வி) இக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

16.நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தின் தும்பல்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஊதியம் தங்கு தடையின்றி கிடைப்பது, தேர்வுநிலை/சிறப்பு நிலை ஊதிய நிர்ணய ஆணைகள் மற்றும் பணப்பயன்கள்  கிடைப்பது ஆகியவற்றில் காணப்படும் சிக்கல்களை விரைந்து களைந்திடுவதற்கு 
முன்வர வேண்டுமாய் நாமகிரிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலர் மற்றும் நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )ஆகியோரை இக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 

17.மாவட்டத்தின் ஒரு சில வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகப் பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஒரு சில வட்டாரக்கல்வி அலுவலர்கள் வண்டியோட்டிகளாகவும், வருமான வசூலுக்கான ஆள்காட்டிகளாகவும்  ஆசிரியர்களை பயன்படுத்திக்
கொண்டு வருகின்றனர். ஒருசில வட்டாரக்கல்வி அலுவலர்களின் இத்தகு முறையற்ற-மனித நாகரீகமற்றச் செயல்பாடுகள் ஆசிரியர்களிடையே தேவையற்ற சிக்கல்களை- பிரச்சனைகளை உருவாக்கி விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி கல்விக்களத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து 
வருகிறது என்பதை நல்லெண்ண அடிப்படையில் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மேலான கவனத்திற்கும்- சட்டப்படியான தகுத்த நடவடிக்கைகளுக்கும் இக்குழு முன்னிலைப்படுத்துகிறது‌.

-மெ.சங்கர்
மாவட்டச்செயலாளர்

அறியலாம் ஆப்ஸ் ~ ஹைவே வெதர்...

மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றம் துவக்கம்...