ஞாயிறு, 26 மார்ச், 2023
சனி, 25 மார்ச், 2023
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) மாவட்ட செயற்குழுக்கூட்ட நிகழ்வுகள் 25.03.2023
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*
*நாமக்கல் மாவட்டம் (கிளை)*
மாவட்ட செயற்குழுக்கூட்டம் 25.03.2023 (சனி) இன்று காலை 11.15 மணிக்கு செல்லப்பம்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளியில் நடைபெற்றது...
வியாழன், 23 மார்ச், 2023
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கல்வி மாவட்டம் புதூர் ஒன்றியத்தில் உள்ள உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பள்ளி வேலை நேரத்தில் எண்ணும் எழுத்தும் விழா நடந்து கொண்டிருக்கும் போது அத்துமீறி ஆசிரியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கயவர்களை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கண்டன அறிக்கை
தமிழ்நாட்டு ஆசிரியர்களின் நீண்ட நெடுநாள் எதிர்பார்ப்பு ஆசிரியர் பணிப்பாதுகாப்புச் சட்டம்!
தூத்துக்குடி-நம்பிபுரம் சம்பவத்தின் வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது
வரவேற்கத்தக்கது! பாராட்டத்தக்கது!
தமிழ்நாட்டு ஆசிரியர்களின் நீண்ட நெடுநாள் எதிர்பார்ப்பு
ஆசிரியர் பணிப்பாதுகாப்புச் சட்டம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பள்ளி ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் விரைந்து இயற்றப்படுதல் வேண்டும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே! ஆசிரியர்களிடம் நம்பிக்கையை விதையுங்கள்!
--------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம் புதூர் சரகத்திற்கு உட்பட்ட நம்பிபுரம் அரசு நிதி உதவிபெறும் பள்ளிச்சம்பவத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் விரைந்து கைது செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்காகும்; பாராட்டத்தக்கதாகும்.
தமிழ்நாடு அரசுக்கு மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு
மனம் நிறைந்த நன்றி சொல்வது ஒன்றும் தவறாகாது.
வன்முறை தாண்டவம் ஆடிய கொடுரமான கொலைவெறியாளர்களின் கைது நடவடிக்கைகள் மட்டும் போதாது. சிறையில் அடைப்பது மட்டும் போதாது.
தமிழ்நாட்டு ஆசிரியர்களின் மீது
வெறுப்புணர்வோடு-
பகையுணர்வோடு மோதல் போக்கினை கடைப்பிடிக்கும் சமூக விரோதச்சக்திகளுக்கு பாடம் புகட்டும் வகையில் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை மற்றும் தெம்பு தரும் வகையில் தூத்துக்குடி சம்பவத்தின் தொடர் சட்ட நடவடிக்கைகள் அமைவது சிறப்பான செயலாகும்- சீரிய நடவடிக்கையாகும்.
தனிமனித ஆதங்கம் , அதிருப்தி மற்றும் கோபங்களுக்கெல்லாம் ஒரு கும்பலை உருவாக்கிக்கொண்டு ஒரு ஆசிரியரை தாக்குவது , ஒரு பள்ளியை தாக்குவது ,வன்முறை வெறியாட்டம் நடத்துவது ,
வசைபாடுவது, திட்டித்தீர்த்துக்
கொள்வது , சமூகத்தின் பொது நன்மைக்கான சட்டத்தை தமது சுய ஆதாயத்திற்கு சாதகமாக்கிக்கொண்டு, குறிப்பாக தவறாக பயன்படுத்திக்கொண்டு பணம் பறிக்கும் நோக்கில் புகார் கொடுப்பது , கும்பல் பலத்தில்- திமிரில் பேரம் பேசுவது, பேரம் படியாத நிலையில் சிறைக்கு அனுப்பி வைப்பது , தனக்கு ஒத்துவராத ஆசிரியரை பழி வாங்கி அசிங்கப்படுத்திடும் நோக்கில் வழக்கு நடத்துவது, ஊடகம் மற்றும் நாளேடுகளை துணைக்கு வைத்துக் கொள்வது என்பதெல்லாம் வன்மையான கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; வெட்கக் கேடானதாகும்;
வேதனைக்குரியதாகும்;
கவலைக்குரியதாகும்.
நம்சமூகம்
எங்கே போகிறது?
எதை நோக்கி பாய்கிறது?
எதை விரும்புகிறது?
என்பதை கவனமுடன்-
கவலையுடன்
சீராய்வு செய்திடல் வேண்டும்.
கவலைக்குரியவற்றை சரி செய்து சீரமைத்திடல் வேண்டும்.
தமிழ்நாட்டின் உயர் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருந்த குறிப்பாக மேதகு ஆளுநர் , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை பலரின் மீது பல்வேறு புகார்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்துள்ளது. குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டு
வழக்குகள் நடந்துள்ளது .
தீர்ப்புரைகள் வாசிக்கப்பட்டுள்ளது. தண்டனைகள் விதிக்கப்பட்டும் உள்ளது.
இன்றும் கூட
ஒருசிலரின் மீது புகார்கள் எழுப்பப்படுகிறது .
இலஞ்ச-லாவண்ய-
ஊழல் குற்றச்சாட்டுகள் குவிகிறது.
ஆனால் இச் சமூகத்தில் பெரும் கோபம்- பெருங்கிளர்ச்சி -பெரும் புரட்சி ஏதும் வெடிப்பதில்லை.
மாநிலத்தின் தலைமைச் செயலாளர் முதல் கிராம வருவாய் ஊழியர் அனைவரும் அரசின் ஊழியர்களே. மக்களின் வரித்தொகையில் ஊழியம் பெறுகின்றவர்களே.
இவர்களின் பலரின் மீது அன்றாடம் ஏதேனும் ஒரு குறைபாடுகள் சொல்லப்படுகிறது.
அரசு ஊழியர்களில் சிலர் அன்றாடம் இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு
வருகின்றனர்.
இவர்களின் மீதெல்லாம் மக்களுக்கும் - எந்த ஒரு புரட்சியாளருக்கும்-
சமூக சீர்த்திருத்த வாதிக்கும்,தத்துவவாதிக்கும் ஆத்திரம் பொத்துக்கொண்டு வருவதில்லை.இவர்களை எல்லாம் அடித்து துவைத்து சக்கையாய் பிழிந்து இடுப்பெலும்பை உடைத்து கொடிக்கயிற்றில் பங்குனி -சித்திரை வெயிலில் தொங்கவிட வேண்டும் எனும் எண்ணம் எழுவதில்லை:
சிந்தனை உதிப்பதில்லை.ஆசை வருவதில்லை.
இதுதான் ஏனோ!?
அறச்சீற்றம் என்பரே , அச்சீற்றம் கூட ஆள் பார்த்து தான் சீறுமோ?பாயுமோ?அப்பாவி ஆசிரியர்கள் என்றால் தான் அந்த அறங்கெட்ட சீற்றம் படமெடுத்து ஆடுமோ ? என்னவோ?
ஆசிரியர்கள் என்றால் ,
அதுவும் குறிப்பாக
தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்றால் எங்கிருந்து தான் இத்தனை பேருக்கு இவ்வளவு ஆத்திரம் வருமோ?ஆக்ரோஷம் வருமோ? கோபம் வருமோ?
வந்து நின்று பேயாட்டம் போடுமோ?
எவருக்கும் தெரிவதில்லை.
நம்மூரில் வழக்குச் சொல் சொல்வர்.
இப்பேதெல்லாம் அதை யாரும் தவறாக சொல்வதில்லை; பயன்படுத்துவதும் இல்லை.
ஏனெனில் அந்த வழக்குத்தொடரை பயன்படுத்திடுவதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதால் எவரும் பயன்படுத்துவதில்லை.
அந்த தரப்பினரை காயப்படுத்தும் எண்ணத்தில் நானும் சொல்லவில்லை.
ஆசிரியர்களின் காயங்களை -பாதிப்புகளை சொல்லி புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.அந்த தரப்பினர் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஊருக்கு இளைத்தவர் பிள்ளையார் கோவில் பூசகர் என்பது போல்தான் ஆசிரியர்களை கருதிக் கொள்கின்றனர்.
இத்தகு
நினைப்பில்-
மதிப்பீட்டில் - இந்த
அற்ப மனநிலை தரும் தைரியத்தில்-துணிச்சலில் சமூகவிரோதக்
கும்பல்கள் ஆசிரியர்கள் மீது கை வைக்கின்றனர். கால் வைக்கின்றனர்.
செருப்பு கழட்டி சிலம்பம் ஆடி காட்டுகின்றனர். தகாத வார்த்தையால் பேசிப்பார்த்து அரிப்பு தீர்த்துக்
கொள்கின்றனர்.ஆசிரியர்களின் கல்வி ஊழிய ஊதியத்தின் மீது பேராசைக்கொண்டு பொய் புகார்கள் பதிவுசெய்து பணப்பேயாய் உலாவுகின்றனர். அன்றாடம் ஏதேனும் வடிவில்-பெயரில் ஆசிரியர்களை துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்.
எங்கு எந்த ஆசிரியர் கிடைப்பார் என்று ஏதேனும் ஒரு கும்பல் தமிழகத்தின் ஏதேனும் ஒரு மூலையில் அலைந்துக் கொண்டு இருப்பதும், காசு பார்க்கும் கயமைத் தனத்திற்கு களிமண் மூளையைப்போட்டு கசக்கி பிழிந்து பொய்ப் புகார்கள் ஜோடிப்பதும்,
நீதி தவறாத மகா பெரிய நியாஸ்தர்கள் போன்று கட்டப்
பஞ்சாயத்துகள் நடத்துவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டே இருப்பதாகவும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குடும்பங்கள் அன்றாடம் பாதிக்கப்படுவதும்-
அசிங்கப்படுவதும் தடுக்கப்படாத நிலை நிலவுவதாகவும் பலரால் பேசப்பட்டு வருவது எவ்வளவு பெரிய கொடுமையானது. இக்கொடுமையை -இப்பேரவலத்தை செவிக்கொடுத்துக்
கேட்கையில், நினைத்துப் பார்க்கையில் ஈரக் குலையெல்லாம் நடுநடுங்குகிறது .
இதயத்துடிப்பு நின்று பதறுகிறது.
இத்தகு பேரவலத்தில் தான் தமிழ்நாட்டின் ஆசிரியர் சமுதாயம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இத்தகு அவலஓலங்களோடு
தான் , தான் நிலைகுலைந்துப்
போனாலும் தம்மை நாடி நம்பிக்கையோடு பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளுக்கு சிரத்தை உணர்வோடு தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயம் கல்விப் பணியாற்றி வருகின்றது.
தன்நிலை மிக மோசமான நிலையில் வைக்கப்பட்டு இருந்தாலும் ,
தமிழ்நாட்டுக் குழந்தைகளின் வருங்காலம் செம்மையாக இருத்தல் வேண்டும் என்பதில் தணியாத தாகம்-வேட்கை கொண்டது தமிழ்நாட்டு ஆசிரியர்சமுதாயம் என்பது தரவுகளின் அடிப்படையிலும், களயெதார்த்தத்தின் நிலையிலும் அசைக்கமுடியாத உண்மையாகும்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு ஏற்றம் பெறுவதற்கு தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்தின் மனஅமைதி -கண்ணியம்-உயிர் -உடைமை -பணிப்பாதுகாப்பு-
பள்ளிப்பாதுகாப்பு உறுதிசெய்யப்படுதல் வேண்டும்.
இத்தகு பெரும் கடமையும-பெரும் பொறுப்பும் தமிழ்நாடு அரசின்முன் உள்ளது.
தமிழ்நாட்டு ஆசிரியர்கள் நீண்ட நெடு ஆண்டுகளாக பள்ளி ஆசிரியர் பணிப்பாதுகாப்புச்சட்டம்
இயற்றப்பட்டு தங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்று ஒரு சட்டப்பாதுகாப்பினை கோருகின்றனர்.
இச்சட்டப்பாதுகாப்பு கேட்டல் என்பது சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றேயாகும். இச்சட்ட நடவடிக்கைகள் காலம் தாழ்த்தாது மேற்கொள்ளப்படல் வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு கொடுத்துள்ள உறுதிமொழி மற்றும் நம்பிக்கையில் ஒன்றைக்கூட நிறைவேற்றிட வில்லை
எனும் ஆதங்கம் இருக்கிறது.தமிழ்நாடு கல்வித்துறையின் அன்றாட அவசர அலங்கோலமான நடவடிக்கைகளில் ஆசிரியர்களிடம் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நம்பிக்கை மொழிகளின் மீது நம்பிக்கை இன்மை அரும்புகிறது.
இத்தகு இன்றைய சூழலில் தேவைப்படும் கண்ணியமிக்க வாழ்வினை விரும்பும் தமிழ்நாட்டு ஆசிரியர்களின் விருப்பத்தினை-எதிர்பார்ப்பினை நிறைவேற்றி
மாண்புமிகு.முதலமைச்ர் அவர்கள் ஆசிரியர்களோடு இருக்கிறார்; ஆசிரியர்களின் நியாயத்தோடு நிற்கிறார் எனும் நம்பிக்கையை விதைத்திடல் வேண்டும். இது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செய்தே ஆக வேண்டிய அறச்செயல்களில் இதுவே முதன்மையான ஒன்றாகும்.
-கரிகாலன்.