வியாழன், 1 மார்ச், 2018

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பதவி உயர்விற்கு எழுத வேண்டிய துறைத்தேர்வு -மே 2018க்கு அறிவிப்பு வெளியீடு...

மின்னணு மயமாகும் PF கணக்குகள் - காகிதமில்லா பரிமாற்றத்திற்கு மாற ஆகஸ்ட் 15 வரை கெடு.


பிராவிடன்ட் ஃபன்ட் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகள் மற்றும் பரிமாற்றங்கள் அனைத்தும்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முழுமையாக மின்னணு மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து பி.எப் (P.F) அலுவலகங்களும் காகிதமில்லாப் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைகெடு விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பி.எப் உறுப்பினர்களின் ஆதார் எண் சரிபார்த்தல், அனைத்துக் கோப்புகளையும் மின்னணு வடிவில் மாற்றுதல் உள்ளிட்ட பணிகள்முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSA-SPD PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி~மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி…

மேல்நிலைப் பொதுத்தேர்வு மார்ச் 2018-தேர்வு மைய அறைக் கண்காணிப்பாளர் மற்றும் சொல்வதை எழுதுபவர்-தேர்வு பணி நியமனம் செய்து ஆணை வழங்குதல்~நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்....

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது...


2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பொதுத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் என மொத்தத்தில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுத உள்ளனர்.

சென்னை மாநகரில் 407 பள்ளிகளில் இருந்து 156 தேர்வு மையங்களில் மொத்தம் 50 ஆயிரத்து 584 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 147 பள்ளிகளில் இருந்து 38 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 278 புதிய தேர்வு மையங்கள் மாணவர்களின் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு:

இந்த ஆண்டு தமிழ் வழியில் பயின்று மேல்நிலை தேர்வினை 5 லட்சத்து 32 ஆயிரத்து 243 பேர் எழுத இருக்கின்றனர்.

இந்த தேர்வுக்காக மொத்தம் 45 ஆயிரத்து 380 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட இருக்கின்றனர். பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின் வாயிலாக படித்து அறிந்து கொள்ளலாம்.

பறக்கும் படை:

இந்த தேர்வுக்காக 296 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மை கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செல்போனுக்கு தடை:

தேர்வு மைய வளாகத்திற்கு செல்போன் எடுத்துவருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி, உரிய தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்தும், தேர்வு மையத்தினை ரத்து செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 103 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு கட்டுப்பாட்டு அறை:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் குறித்த புகார்களை தெரிவிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு 8012594105, 8012594115, 8012594120, 8012594125 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பேசலாம்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 28 பிப்ரவரி, 2018

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (2017-18) பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் வழங்குதல் சார்பாக ...


🌟பயிற்சியின் நோக்கங்கள்:

 ⚡அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தல்.

⚡குழந்தையின் உரிமைகள்.

⚡பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பணிகளை அறியச்செய்தல்.

⚡பாலினப்பாகுபாடு.

⚡பேரிடர் மேலாண்மை.

⚡தரமான கல்வி.

⚡கற்றல் விளைவுகள்.

⚡உள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள்.

⚡பள்ளி மேலாண்மைக் குழு- பள்ளி நிதியைப் பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்.

⚡சமூகத் தணிக்கை.

⚡தூய்மைப் பள்ளி மற்றும் நடத்தை மாற்றம்.


🌟பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் (பள்ளி வாரியாக) மற்றும் எண்ணிக்கை:

⚡பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் - 1

⚡பள்ளி மேலாண்மைக் குழு துணைத்தலைவர் (சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையின் பெற்றோர்) - 1

⚡பெற்றோர் (நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் உட்பட) - 2

⚡மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரிதிநிதி - 1

⚡ஆசிரியர் - 1


🌟பயிற்சி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துவதற்கான செலவின விபரம்:

⚡உணவு - ரூ.50

⚡தேநீர் + சிற்றுண்டி - ரூ.16

⚡பயணப்படி - ரூ.20

⚡போட்டோ + பேனர் + TLM + கருத்தாளர் மதிப்பூதியம் - ரூ.14

⚡பயிற்சி கட்டகம் - ரூ.20

⚡ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் மார்ச் 2018 மாதத்தில் 23 ம் தேதியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துவதற்கு - ரூ.180


🌟குறிப்பு:

⚡மதிய உணவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள செலவினத்தொகையை பயிற்சியில் பங்கேற்கும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ரொக்க தொகையாக வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


🌟மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சி கால அட்டவணை:

⚡முதல் கட்டம் - 05.03.2018

⚡இரண்டாம் கட்டம் - 06.03.2018


🌟பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவிலான பயிற்சி கால அட்டவணை:

⚡முதல் கட்டம் - 12.03.2018

⚡இரண்டாம் கட்டம் - 14.03.2018

[பயிற்சி இந்த இரண்டு கட்டங்களில் ஏதேனும் ஒரு கட்டம் (ஒரு நாள்) மட்டுமே பயிற்சி]

NCERT பாடங்கள் குறைக்கப்படும்~ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்...


கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் பாதியாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

பள்ளிகளுக்கான என்சிஇஆர்டி பாடத் திட்டங்கள், பி.ஏ., பி.காம். படிப்புக்கான பாடத்திட்டங்களைவிட கூடுதலாக உள்ளது. இதைப் பாதியாகக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் 2019 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம், மாணவர்கள் தங்களை அனைத்து துறையிலும் மேம்படுத்திக் கொள்வதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும்.

மாணவர்கள் மார்ச் மாதம்தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் மே மாதத்தில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை அடுத்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும். அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்தார். 

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம் சர்.சி.வி.ராமன் விளைவு வெளியிடப்பட்ட நாள்... "ராமன் விளைவு" [Raman Effect] என்றால் என்ன?


பொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது. சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர். 

இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது.

இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம். இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. 

அவை:

படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி.

முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்.

முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்.

பயன்பாடுகள் :

இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் "கைரேகை" யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.

பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல், சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல், வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல், அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல், 10 -11 வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளிவேதியலாளர்கள், ஒளிஉயிரியலாளர்களுக்கு லேசர்-இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு "பால் ஆதார்"~மத்திய அரசு அறிவிப்பு...

சேலம்~நாமக்கல் வழியாக மேலும் 2 ரயில்கள் இயக்கம்...