புதன், 28 பிப்ரவரி, 2018

NCERT பாடங்கள் குறைக்கப்படும்~ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்...


கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் பாதியாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

பள்ளிகளுக்கான என்சிஇஆர்டி பாடத் திட்டங்கள், பி.ஏ., பி.காம். படிப்புக்கான பாடத்திட்டங்களைவிட கூடுதலாக உள்ளது. இதைப் பாதியாகக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் 2019 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம், மாணவர்கள் தங்களை அனைத்து துறையிலும் மேம்படுத்திக் கொள்வதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும்.

மாணவர்கள் மார்ச் மாதம்தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் மே மாதத்தில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை அடுத்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும். அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக