ஞாயிறு, 25 மார்ச், 2018

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்~ ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு…

மே-8ம்  தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த தடைவிதித்தது. தமிழக தலைமை செயலாளர் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண அறிவுறுத்தியது. ஆனால் அரசு அதை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில்  பேரணியாக சென்றனர்.

 பேரணியில் ,
புதிய பென்சன் திட்டம் ரத்து, இடைநிலை  ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனே களைய வேண்டும்,
தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மே 8ம் தேதி கோட்டை முற்றுகை  போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

How to Pay Income Tax in Online (e-Filing)...

Click here for video...

நாமக்கல்~ஜேக்டோ ஜியோ பேரணி(24-03-18)~நாளிதழ் செய்திகளில்...

வெள்ளி, 23 மார்ச், 2018

ஆயுதப்படை தியாகிகளின் குழந்தைகள் கல்விச் செலவு முழுவதையும் இனி அரசு ஏற்கும்...

தேசிய திறனாய்வுத்தேர்வு முடிவு வெளியீடு...

ஓய்வூதியம் என்பது மானியம் அல்ல, ஊழியர்களின் பல ஆண்டு பணிக்கான உரிமை...

பணிக்கொடை தொகைக்கு ரூ 20 லட்சம் வரை வரி விலக்கு...

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல் மற்றும் சமூக தணிக்கை ஆய்வு ஒரே நாளில் நடத்திட வேண்டும்.540 ரூபாய்க்கு மட்டும் செலவினம் மேற்கொள்ள வேண்டும்~மாநில திட்ட இயக்குநர்...