திங்கள், 14 ஜனவரி, 2019

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் குறிக்கோள்கள் - பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுத்தம், சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சு , கட்டுரை, மற்றும் ஒவியப் போட்டிகள் - மாவட்ட அளவில் நாள் மற்றும் இடம் ஒதுக்கீடு மற்றும் போட்டி நடுவர்கள் நியமித்தல் - சார்பு...

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தவறான செயல்திட்டம் - அமர்த்தியா சென்...

இடஒதுக்கீடு சாராம்சத்தை குழப்பிக்கொண்ட சிந்தனை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சாடியுள்ளார்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தவறான செயல்திட்டம் - அமர்த்தியா சென்

சமூகத்தில் உயர்சாதியினராக கூறப்படுபவர்களுக்கு பொருளாதாரத்தின் அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, இடஒதுக்கீடு சாராம்சத்தை குழப்பிக்கொண்ட சிந்தனை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சாடியுள்ளார்.

முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமூக நீதி கோட்பாட்டை வேரறுக்கக்கூடிய இந்த சட்டம் நிறைவேறியதை தொடர்ந்து பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து தனது கருத்தை வெளியிட்ட பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு தனியாக 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் குழப்பமான சிந்தனையின் வெளிப்பாடு" எனக் கூறியிருக்கிறார்.

"இந்திய மக்கள் தொகையை முழுவதுமாக இடஒதுக்கீடு வளையத்துக்குள் கொண்டுவருவது சமூக நீதி நோக்கில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு திட்டத்தை நீக்குவதற்கு சமம். குழப்பிக்கொள்ளப்பட்ட இந்த செயல்பாடு சிக்கலான தீவிர அரசியல், பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.

நரேந்திர மோதி தலைமையிலான ஆளும் பாஜக அரசு வறிய மக்களுக்கான வேலைவாய்பை உறுதிப்படுத்த தவறியிருக்கிறது. வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய தளங்களிலும் கடுமையான தோல்வி தான். முந்தைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி திட்டங்களை பின்பற்றியதன் மூலம் மிகப்பெரிய பொருளாதார சரிவை அடையாமல் கடந்துகொண்டிருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படும் கூற்றை நான் மறுக்கிறேன். உண்மையில் இவை இரண்டும் தவறான கொள்கை" என்று அமர்த்தியா சென் கூறினார்.

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தலைப்புகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் எலச்சிப்பாளையம் ஒன்றிய செயற்குழு கூட்டம்~நாளிதழ் செய்திகளில்...

பத்து சதவீத இடஒதுக்கீடு...

ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள் (தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் தெரிவித்தல் சார்ந்து...

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி-01.01.2019 ல் உள்ளவாறு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலை மொழி ஆசிரியர்கள் / முதுகலைப் பாட ஆசிரியர்கள் /உடற்கல்வி இயக்குநர் (நிலை) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து கருத்துருக்கள் கோருதல்-சார்பு...

கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, ஒன்றிய அமைப்பு கோரிக்கை விண்ணப்பம்....

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் ஒன்றியக் கிளை ஒன்றிய ஆசிரியர்களின் 5 அம்சக் கோரிக்கை மனுவினை நாமக்கல் வட்டாரக்கல்வி அலுவரிடம் 12.01.19 அன்று அளித்துள்ளது...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் ஒன்றியச்செயற்குழுக்கூட்ட செய்தியறிக்கை...