திங்கள், 14 ஜனவரி, 2019

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தவறான செயல்திட்டம் - அமர்த்தியா சென்...

இடஒதுக்கீடு சாராம்சத்தை குழப்பிக்கொண்ட சிந்தனை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சாடியுள்ளார்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தவறான செயல்திட்டம் - அமர்த்தியா சென்

சமூகத்தில் உயர்சாதியினராக கூறப்படுபவர்களுக்கு பொருளாதாரத்தின் அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, இடஒதுக்கீடு சாராம்சத்தை குழப்பிக்கொண்ட சிந்தனை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சாடியுள்ளார்.

முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமூக நீதி கோட்பாட்டை வேரறுக்கக்கூடிய இந்த சட்டம் நிறைவேறியதை தொடர்ந்து பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து தனது கருத்தை வெளியிட்ட பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு தனியாக 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் குழப்பமான சிந்தனையின் வெளிப்பாடு" எனக் கூறியிருக்கிறார்.

"இந்திய மக்கள் தொகையை முழுவதுமாக இடஒதுக்கீடு வளையத்துக்குள் கொண்டுவருவது சமூக நீதி நோக்கில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு திட்டத்தை நீக்குவதற்கு சமம். குழப்பிக்கொள்ளப்பட்ட இந்த செயல்பாடு சிக்கலான தீவிர அரசியல், பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.

நரேந்திர மோதி தலைமையிலான ஆளும் பாஜக அரசு வறிய மக்களுக்கான வேலைவாய்பை உறுதிப்படுத்த தவறியிருக்கிறது. வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய தளங்களிலும் கடுமையான தோல்வி தான். முந்தைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி திட்டங்களை பின்பற்றியதன் மூலம் மிகப்பெரிய பொருளாதார சரிவை அடையாமல் கடந்துகொண்டிருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படும் கூற்றை நான் மறுக்கிறேன். உண்மையில் இவை இரண்டும் தவறான கொள்கை" என்று அமர்த்தியா சென் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக