வெள்ளி, 13 டிசம்பர், 2019

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிகளை ஒன்றிய அளவில் உள்ள வட்டார வளமையங்களிலேயே நடத்திட வேண்டும்- நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை..


*நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் தலையீட்டினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோருகிறது..*



*DSE Proceedings- Dated:13.12.2019:-* *மாணவர்களின் வருகைப் குறித்து பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்புதல்- விபரங்களை உறுதி செய்தல் சார்பு!


தொடக்க நிலை வகுப்புகள் (1 முதல் 5 வகுப்புகள்) ~ அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை-டிசம்பர்-2019…


புதிய Userid & Password மூலம் ஒவ்வொரு ஆசிரியரும் நிரப்ப வேண்டிய PINDICS FORM -video...

வியாழன், 12 டிசம்பர், 2019

TNTP ~ஆசிரியர்களுக்கான New Username & Password…


டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.

 ரஷ்யா,
சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற தினம் இன்று.

சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி 1991ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முடிவெடுத்தனர்.
டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.

 ராஜா செல்லையா எனப் பரவலாக
அறியப்படும் ராஜா ஜேசுதாஸ் செல்லையா அவர்களின் பிறந்த தினம் இன்று.


 ராஜா செல்லையா(12 டிசம்பர் 1922 - 7 ஏப்ரல்
2009) ராஜா செல்லையா ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்.

 இந்திய
பொருளாதாரத்தில் வரி சீர்திருத்தத் துறையில்
முன்னோடியாக விளங்கியவர். இவரது தலைமையில் வரி
சீர்திருத்த குழுவை இந்திய அரசு அமைத்தது.

 ஸ்பிக்
ஆதரவுடன் சென்னையில் நிறுவப்பட்ட
மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்
நிறுவனத்தின் முதல் தலைவராவார்.
டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.

👉 சர்வதேச கன உலோக தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி உலகளவில் உள்ள கன உலோக ரசிகர்கள் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

👉 இத்தினத்தில் சிறந்த மற்றும் மிக பெரிய கன உலோகங்களினால் வாசிக்கப்பட்ட ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது. வீடுகள், வேலை செய்யும் இடம், கார் ஆகியவற்றிலும் இச்சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட தினம் இன்று(1911).

1911ஆம் ஆண்டு டிசம்பர் 12இல்
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.

18,19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது.

1911ஆம் ஆண்டு இதே நாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.

1920களில் பழைய டெல்லி நகருக்குத் தெற்கே புதுடெல்லி என பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது.

1947இல் இந்திய விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.

On Dec 12, 1911, Delhi replaced Calcutta as the capital of India