செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

*🎾CPS திட்டம் - 01.01.2021 முதல் 31.03.2021 வரை புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு.*

*🎾CPS திட்டம் - 01.01.2021 முதல் 31.03.2021 வரை புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு.*

*🏮சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 27.02.2021 (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியீடு!!!*

*🏮சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 27.02.2021 (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியீடு!!!*

*✍️26 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!*

*✍️26 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!*

*🏮நாளை மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு (24.02.2021) அனைத்து பள்ளிகளிலும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியினை எடுக்க வேண்டுதல் தொடர்பான மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.*

*✍️தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் - 2021-2022 - Interim Budget Speech of the Honble Deputy Chief Minister...Tamil - PDF*

*✍️தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் - 2021-2022 - Interim Budget Speech of the Honble Deputy Chief Minister...Tamil - PDF*
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் - 2021-2022 ஐப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

*🚌பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்:*

*🚌பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்:*
 
*தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.*

*ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.*

*அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், பிப்ரவரி 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.*

வட்டாரக்கல்வி அலுவலருக்கானபதவி உயர்வு கலந்தாய்வினை ஆன்லைனில் மாவட்டத்தலைநகரில்நடத்துக!மாவட்டத்தில் காலியிடம் இருக்கா?வட்டாரக்கல்வி அலுவலர் ஆகப்போகிறோமா? உறுதிப்படத்தெரியாத நிலையில் பெருந்தொற்று காலத்தில் சென்னைக்கு அழைக்காதே!பொதுக்கல்வி மேம்பாட்டுப்பேரவை வேண்டுகோள்!

வட்டாரக்கல்வி அலுவலருக்கான
பதவி உயர்வு கலந்தாய்வினை 
ஆன்லைனில் மாவட்டத்தலைநகரில்
நடத்துக!
மாவட்டத்தில் காலியிடம் இருக்கா?
வட்டாரக்கல்வி அலுவலர் ஆகப்போகிறோமா?
 உறுதிப்படத்தெரியாத நிலையில் பெருந்தொற்று காலத்தில் 
சென்னைக்கு அழைக்காதே!
பொதுக்கல்வி மேம்பாட்டுப்பேரவை வேண்டுகோள்!

வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஒரே ஒன்றியத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றுவது கல்விநலனுக்கு - நிர்வாக நலனுக்கு உகந்தது அல்ல!தவறிழைக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்களை பாதுகாப்பது சரியான செயல் அல்ல!தமிழ்நாட்டின்கல்விநலன் காத்திடுக!பொதுக்கல்விமேம்பாட்டுப்பேரவை வேண்டுகோள்!

வட்டாரக்கல்வி அலுவலர்கள் 
ஒரே ஒன்றியத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல்  தொடர்ந்து பணியாற்றுவது கல்விநலனுக்கு - 
நிர்வாக நலனுக்கு உகந்தது அல்ல!
தவறிழைக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்களை பாதுகாப்பது சரியான செயல் அல்ல!
தமிழ்நாட்டின்
கல்விநலன் காத்திடுக!
பொதுக்கல்வி
மேம்பாட்டுப்பேரவை வேண்டுகோள்!

திங்கள், 22 பிப்ரவரி, 2021

*🏮Pay continuation order- DEE - SSA - 1581 B.T. Assistant posts & 3565 Secondary Grade Teachers posts...*

*🏮Pay continuation order- DEE - SSA - 1581 B.T. Assistant posts & 3565 Secondary Grade Teachers posts...*

இரட்டைப் பட்டங்களை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்கள்: யுஜிசி விதிமுறை...

இரட்டைப் பட்டங்களை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்கள்: யுஜிசி விதிமுறை...

இரட்டை அல்லது கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவறிக்கையை யுஜிசி இறுதி செய்துள்ளது. எனினும் மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை மீதான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி (கூட்டுப் பட்டம், இரட்டைப் பட்டங்களை வழங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கல்வி புரிந்துணர்வு) விதிமுறைகள், 2021 வரைவறிக்கையின்படி,

''இந்திய உயர் கல்வி நிறுவ்னங்கள் வெளிக்நாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நிறுவன அங்கீகாரம், பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். எனினும் ஆன்லைன் மற்றும் திறந்தநிலை, தொலைதூர வழிக் கற்றலுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது.

தரத்துடன் ’நாக்’ என அழைக்கப்படும் தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சில் அங்கீகாரம் (NAAC) பெற்ற இந்தியக் கல்வி நிறுவனங்கள் அல்லது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ள இந்தியக் கல்வி நிறுவனங்கள் அல்லது உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்கலாம். எனினும் பிற கல்வி நிறுவனங்கள் யுஜிசியிடம் அனுமதி பெற வேண்டும்'' என்று வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ''படிப்பை முறையாக முடித்தவுடன் இரட்டைப் பட்டப் படிப்புகளை (Dual Degree) வழங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் மூலம் தனித்தனியாகவும் ஒரே நேரத்திலும் பட்டங்கள் வழங்கப்படும். அதே நேரத்தில் கூட்டுப் படிப்பு (Joint Degree) ஒரே சான்றிதழாக வழங்கப்படும்'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை மீதான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை மீதான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.