வியாழன், 11 மார்ச், 2021

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் நிதிமுறைகேடுகளை எதிர்த்து 17.03.2021 அன்று சுவரொட்டி இயக்கம் நடைபெறுகிறது.சுவரொட்டியை தயாரித்து , தேவையெனில் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்று மாவட்டம் முழுதும் சுவரொட்டி இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திடுவதற்கு ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு பணிகளை தொடங்கி உள்ளது.

கோரிக்கை மனு இயக்கம் வெற்றிகரமாக நடந்தேறியது!
++++++++++++++++++++
அன்பானவர்களே! வணக்கம்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளை முறைப்படுத்தி சங்கத்தினை- சங்க உறுப்பினர்களை பாதுகாத்திடுதல், 
நிதிஇழப்புத் தொகையினை சங்கச் செயலாளரிடம் இருந்து முழுமையாக வசூல் செய்திடுதல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசும், தமிழக கூட்டுறவுத்துறையும் நிறைவேற்றிட வலியுறுத்தி கடந்த 06.03.2021 அன்று ஏழுகட்டத்தொடர் நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் , நாமக்கல் மாவட்ட அமைப்பு அறிவித்தது.

இதனடிப்படையில் ,
10.03.2021அன்று 
தமிழ்நாடு தலைமைத்தேர்தல் ஆணையாளர்,
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அரசு முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு கூட்டுறவுப்பதிவாளர்,நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்,
நாமக்கல் கூட்டுறவு சரக துணைப்பதிவாளர், எருமப்பட்டி கூட்டுறவு சிக்கன நாணயச்சங்க நிர்வாகக்குழுத் தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, எதிர்வரும் 17.03.2021அன்று சுவரொட்டி இயக்கம் நடைபெறுகிறது.
சுவரொட்டியை தயாரித்து , தேவையெனில் தேர்தல் ஆணையத்தின்  அனுமதிப் பெற்று மாவட்டம் முழுதும் சுவரொட்டி இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திடுவதற்கு மாவட்ட அமைப்பு பணிகளை தொடங்கி உள்ளது.

கூட்டுறவுச் சங்கம் காக்கும் ஏழுக் கட்டத் தொடர்நடவடிக்கைகளுக்கும்  அனைத்து தரப்பினரின் ஆதரவினையும் மாவட்டமைப்பு வேண்டுகிறது.
நன்றி!

-மெ.சங்கர்.

*🗳️தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள், 2021 - EPIC இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்!!!*

*🗳️தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள், 2021 - EPIC இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்!!!*

*🗳️தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13ஏ-ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து பிரிவு ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.*

*🗳️வாக்களிப்பு மையங்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்:*

*🗳️வாக்களிப்பு மையங்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்:*

தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப். 30க்குள் நடத்த உத்தரவு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு கூகுள் டூடுல் மரியாதை...

தஞ்சை அருகே ராஜராஜசோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு...

புதன், 10 மார்ச், 2021

தேர்தல் பணி - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

தேர்தல் பணி - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

 தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்- இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

*🌻சித்திக் ஒருநபர்க்குழு அரசாணைகள் வந்தபிறகும் வஞ்சிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள்...11 ஆண்டுக்கும் மேலாக பெருத்த ஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்.*

*🌻சித்திக் ஒருநபர்க்குழு அரசாணைகள் வந்தபிறகும் வஞ்சிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள்...11 ஆண்டுக்கும் மேலாக பெருத்த ஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்.*

*🌻தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...*

*🌻தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...*

 *தமிழகத்தில் தட்டச்சு (Type Writing), சுருக்கெழுத்து (Short Hand) தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...*

*தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.*
*இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும் தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.விவேகானந்தன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:*

*இந்த ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*விண்ணப்பக் கட்டணம் ரூ.20.  தேர்வுக் கட்டணம் ஜுனியர் தேர்வுக்கு ரூ.65, சீனியர் தேர்வுக்கு ரூ.85. இண்டர் தேர்வுக்கு ரூ.80, ஹைஸ்பீடு தேர்வுக்கு ரூ.130.*

*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துக்கான செலான் மற்றும் இதர ஆவணங்களுடன் மார்ச் 26-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது தபால் மூலம்*

*தலைவர்,*
*தேர்வு வாரியம்,*
*தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்,*
*கிண்டி, சென்னை.*

*என்ற முகவரியில்  சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 30 வரை அபராதக் கட்டணம் ரூ.5 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 044-22351018, 22351014 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*