புதன், 22 ஜூன், 2022

எருமப்பட்டியில் பணியாற்றி நாமக்கல்லில் பணியாற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.சந்திரவதனா மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்! ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான அனைத்து வகை முகாந்திரங்களும் உள்ளநிலையில் இவ்வலுவலரை காப்பாற்றுவது கல்வித்துறைக்கு செய்யப்படும் துரோகம் ஆகாதா?! கல்வித்துறைக்கு துரோகம் செய்யத்தான் கல்வித்துறை அலுவலர்களா?!கல்வித்துறை பணியாளர்களா?! ஆசிரியர் என்றால் அம்பாய் பாய்வதும், அலுவலர் என்றால் வில்லாய் வளைந்து , நெளிந்து,குழைந்து இணைந்து நிற்பதும் மனித நாகரீகம் ஆகாது!



 

வேலைநிறுத்தக் காலத்தில் அரசு தண்டனைக் கொடுக்கிறது ஒரு இரகம்! நாமக்கல்லில் மட்டும் கல்வித்துறை அலுவலர்கள் இரகம்...இரகமாய்... தண்டனைத்தருவார்கள்! நாமக்கல்லில் சிஇஓ இடமாறுதல் தண்டனை தந்து சம்பளத்தையும் நிறுத்தி மகிழ்வாங்க!? அரசாணை சம்பளம் தந்துடுனு சொன்னாலும் பிஇஓ தராமல் மன உளைச்சல் தந்து மகிழ்வாங்க!? காலக்கோளாறுகள்!


 

அரசாணை எண் 113 ஆளுக்கு ஆள் மாறுமா என்ன! செயிலுக்குப்போனா என்ன?இடமாறுதல் ஆனா என்ன? பணியைமுறைப்படுத்தி பணப்பலன் தரவேண்டியது தானே? ஊருக்கு ஒரு நியாயம்!


 

நாமக்கல் மாவட்டம் - எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தக்கால ஊதியம் வழங்கப்படாமை - மெத்தனப் போக்குடைய வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்!



 

நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

SMC பள்ளி மேலாண்மைக்குழுப் பயிற்சி சென்னையில்! எருமப்பட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத்தலைவர்கள் பங்கேற்பு!


 

கொரானா தடுப்பூசி முகாம் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்திடுக! நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியர் மன்றம் கோரிக்கை