வியாழன், 30 நவம்பர், 2017

தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை...


அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில்  கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு:

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும்.  இவ்வாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக