ஞாயிறு, 26 நவம்பர், 2017

தமிழ் உச்சரிப்புக்காக தயாராகும் " உலகெலாம் தமிழ்" குறும்படம்...

மதுரை, தமிழ் மொழியை அனைவரும் சரியாக பயன்படுத்தும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பல்வேறு தலைப்புகளில் தயாராகி வரும் குறும்படங்கள், விரைவில் வெளியிடப்பட உள்ளன.

தமிழை சரியாக உச்சரிக்க, ஒலிக்க, எழுத அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஏற்ப, இயற்கை, பண்பாடு, மதிப்பீடுகள் சார்ந்து, பல்வேறு தலைப்புகளில், குறும்படங்கள் தயார் செய்யப்படுகின்றன. இதில், பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, எளிய முறையில் பாடல்களாக, நாடகங்களாக தயாரிக்கின்றனர்.

இதன் மூலம், தமிழை, 30 நாட்களில் எளிதாக புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு அமையும். இவை அனைத்தும், 'உலகெலாம் தமிழ்' எனும் தலைப்பில், 10 - 12 நிமிடங்களுக்கு உட்பட்ட குறும்படங்களாக வெளிவர உள்ளன.

மதுரை திருமலை நாயக்கர் மகாலில், 'ர், ற்' என்ற இரு வார்த்தைகளின் உச்சரிப்பு குறித்து, ஒரு அரசவை காட்சியும், நடனமும் படம் பிடிக்கப்பட்டது.

இந்த குறும்படங்களை, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, தமிழை கற்க விரும்பும், மொழியின் அழகியலை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக