சனி, 4 நவம்பர், 2017

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி...


மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான ஓவியப் போட்டி வரும் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில்,  6, 7 மற்றும் 8-ம்  வகுப்பில்படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 'நம் எதிர்கால தலைமுறையினரைக் காப்பாற்றுவதற்கு, அதிக கவனத்துடன் தண்ணீரைபயன்படுத்தவும்' என்ற தலைப்பில் இந்த ஓவியப் போட்டி நடைபெற வுள்ளது.இதில் வெற்றி பெறும் மாணவர்கள், அடுத்த கட்டமாக மாநில அளவில் நடைபெறும் போட்டி யில் பங்கேற்க தகுதி பெறுவர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்ததாக தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம்.

இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக அனைத்துப் பள்ளி களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக