செவ்வாய், 7 நவம்பர், 2017

விண்வெளிக்குச் சென்ற சிறுவனின் செயற்கைக்கோள்!

டென்னிஸ் பந்தை விட எடை குறைவான செயற்கைக்கோள் 
ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி, இந்தியாவைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளான். இது 3D பிரிண்டரில் மூலம் வடிவமைக்கப்பட்ட முதல் சாட்டிலைட் ஆகும்.

உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, `கியூப் இன் ஸ்பேஸ்' என்ற தலைப்பில் உலகம் முழுதும் உள்ள 11 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செயற்கைக்கோள் தயாரிக்கும் போட்டி ஒன்றை நடத்தியது. `க்யூப் சேட்' என்ற 10 சதுர செ.மீ அளவு உள்ள பெட்டிக்குள் பொருந்தும் அளவிலான செயற்கைக்கோள் ஒன்றை வடிவமைப்பதே அந்தப் போட்டியின் நோக்கமாகும். ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில், 80 சிறந்த செயற்கைக்கோள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக