திங்கள், 11 டிசம்பர், 2017

தேசிய பாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள்... துணை ஜனாதிபதி விருப்பம்!



சென்னை: 
''பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,''
என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.

வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வழங்கி பேசியதாவது: பாரதியாரின் பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் செறிந்தவை. மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என, அவர் வலியுறுத்தி உள்ளார். பாரதியாரின் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழும், தமிழகமும் எனக்கு நெருக்கமானவை. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட போது, எனக்கு தமிழை கற்க நேரமில்லை. அனைவரும், அவரவர் தாய்மொழியில், பேசுவதே சிறப்பு. நான் தற்போது எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாம் முயற்சி கண்டால், பாரதி கண்ட புதுமை தேசத்தை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் பாண்டியராஜன், இல. கணேசன் எம்.பி., - ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக