சனி, 23 டிசம்பர், 2017

இரண்டாம்பருவத் தேர்வு விடுமுறையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோருக்கு கணினிப்பயிற்சி தரப்படும் என்பதை ஆசிரியர் மன்றம் ஆட்சேபிக்கிறது...


அன்பானவர்களே! வணக்கம்.

இரண்டாம்பருவத் தேர்வு விடுமுறையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோருக்கு  கணினிப்பயிற்சி தரப்படும் என்பதை ஆசிரியர் மன்றம் ஆட்சேபிக்கிறது ;
கடுமையாக எதிர்கிறது.
வேலைநாள் இழப்பு எங்கு(பள்ளியில்/அலுவலகத்தில்) ஏற்பட்டதோ அங்குதான் வேலைநாள் ஈடுசெய்வதற்கு ஆணையிடுவது
தான் பொருத்தமானதாகும்.
இதைசெய்யாது இரண்டாம்பருவத்
தேர்வில்  கணினிப்பயிற்சி என்று அறிவிக்கப்பட்டு
 இருப்பது 
ஒரு வகையில் தமிழக அரசின் பழிவாங்கும்
நடவடிக்கையாகும்;
அச்சுறுத்தல் தன்மை கொண்டதாகும் என்றே கருத வேண்டி வருகிறது.

ஜாக்டோ-ஜியோ வின் போராட்ட நடவடிக்கைகளில் பின்னடைவினை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே கணினிபயிற்சி அறிவிப்பை ஆசிரியர்மன்றம் காண்கிறது.
எத்தகு அச்சுறுத்தல்களையும்,
அடக்குமுறைகளையும்,
மிரட்டல்களையும்,
சதித்திட்டங்களையும்
தூள்தூளாக்கி 
தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு அலுவலர்களின் ஒட்டுமொத்த பொதுநலன்களை பேணிப்பாதுகாப்பதில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு 
முழுவீச்சோடு தொண்டாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் .இனமானக்காவலர் .பாவலர்.க.மீ அவர்கள் ,தமிழ்நாடு ஜாக்டோ-ஜியோவின் மாநில அமைப்போடு இணைந்து நின்று கணினிப்பயிற்சி திட்டத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
              நன்றி.
~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக