தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் கூடி ஆராய்ந்தார்கள்.
இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.
இவர்கள் எடுத்த முடிவுகளில்
மிக முக்கியமானது,
முதன்மையானது,
குறிப்பிடத் தக்கது எது என்றால்,
அது தான் திருவள்ளுவர் ஆண்டு முடிவு.
அவை:
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது;
அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது;
திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை;
இறுதித் திங்கள் மார்கழி.
புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள்.
திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2018 + 31 = 2049) என்று அந்நாளில் முடிவு செய்தனர்.
கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்;
புதன் = அறிவன்; சனி = காரி.
தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக