வியாழன், 25 ஜனவரி, 2018

இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தின் 6 மையங்களில் எதிர்வரும் 31.01.2018 (புதன்) பிற்பகல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம்...

அன்பானவர்களே!வணக்கம்.

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் பொதுக்கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோவில் இணைந்துள்ள  உறுப்பமைப்புகள் தனி சங்க நடவடிக்கைகள்,
வழக்காடுதல் போன்றன மேற்கொள்வது சிறந்தசெயலாகாது என ஏற்படுத்திக்கொண்ட பொதுமுடிவின் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோபேரமைப்பினையும்,ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் பொதுக் கோரிக்கைகளையும்  வலுப்படுத்திடும் வகையினில்,
கெட்டிப்படுத்திடும் நிலையினில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஜாக்டோ-ஜியோவின் 
பொதுக்கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் அளவில் பொதுப்போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்று வெற்றிபெறச்செய்வதென தொடர்ந்து  செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் 21.01.2018 அன்று சென்னையில்  கூடிய ஆசிரியர்மன்றத்தின்
மாநிலச்செயற்குழு கீழ்க்கண்ட  இரண்டுஅம்சக்
கோரிக்கைகளை முன்வைத்து   தமிழகத்தின்  
6மையங்களில்
(திருநெல்வேலி,
மதுரை,திருச்சி,
கோயமுத்தூர்,
சேலம் மற்றும் வேலூர்) எதிர்வரும் 31.01.2018 (புதன்)பிற்பகல்  ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென
முடிவாற்றி உள்ளது.

இரண்டு 
அம்சக்கோரிக்கைகள்:

அ) மிகைஊதியம்  பிரிவு அ மற்றும் ஆ பிரிவு ஆசிரியர் -அரசு அலுவலருக்கு   வழங்கப்படல் வேண்டும்.

ஆ) கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரப்படல்  வேண்டும்.

மேற்கண்ட இரண்டு அம்சக்கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 31.01.2018(புதன்)
05.00 மணியளவில்
பிற்பகல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம நடைபெறுகிறது.

இவ்வார்ப்பாட்டத்தில்   கிருட்டிணகிரி,தருமபுரி ,சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச்
சார்ந்த மாநில ,மாவட்ட,ஒன்றிய,நகரக்கிளைப்பொறுப்பாளர்கள்,
மன்ற முன்னோடிகள் ,
மன்றத்தின் ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் பெருந்திரளாய் பங்கேற்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்ற முன்னோடிகள்,ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்கள் சக்திமிக்கதாய் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்பொதுச்செயலாளர்,ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்,தமிழகமேலவையின் முன்னாள் உறுப்பினர் ,பாவலர்அய்யா அவர்களின் வழிகாட்டுதலின் படி நின்று தமிழ்ச்சமுதாயத்திற்க்கு பெருநன்மை தரவல்ல கோரிக்கைகளில்
ஒன்றான  கல்விமாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரும் ஆர்ப்பாட்டத்தை முழு வெற்றிபெறச்செய்வீர்.
                 நன்றி.
           ~முருகசெல்வராசன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக