திங்கள், 19 மார்ச், 2018

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை~ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…


பொதுத் தேர்வில் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வையும் சந்திக்கும் வகையில் 12ம் வகுப்பு தேர்விற்கு பிறகு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை வழங்க இருக்கிறோம். அந்த அட்டவணையில் மத்திய அரசின் 29 பயிற்சி திட்டங்கள் குறித்த விபரங்களோடு, பயிற்சி நடைபெறும் மாநிலங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் காலம், தேர்வு தேதி குறித்த விபரங்களை ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பொதுவாக நமது கல்வி முறை மாறி வருவதோடு 12 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாடதிட்டங்கள் குறித்தும், அதற்கேற்ப மத்திய அரசு கொண்டு வரும் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் கேள்வித்தாள் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று  தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக