திங்கள், 26 மார்ச், 2018

அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்...


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல் 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ல் துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்ரல் 16ல் முடிகிறது. மார்ச் 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 20ல் முடிகிறது. 

பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 44 நாட்கள் கோடை விடுமுறை கிடைத்துள்ளது.

இதுத்தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோடை விடுமுறை அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். கோடை விடுமுறை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை.

வரும் கல்வியாண்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக