சென்னை:மத்திய அரசின் இரண்டு கல்வி திட்டங்கள், ஒன்றாக இணைக்கப் படுவதால், மத்திய, மாநில அரசுகளுக்கு, பல கோடி ரூபாய் செலவு குறையும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில், ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், எஸ்.எஸ்.ஏ., என்ற, அனை வருக்கும் கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன. இரு திட்டங்களுக்கும், தனியாக இயக்குனர்கள், இணை இயக்குனர், ஒருங்கிணைப்பாளர்கள், தனி அலுவலகம் என, பல கோடி ரூபாய் நிர்வாக பணிகளுக்காக செலவிடப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின் செலவுகளை குறைக்கும் வகையில், இந்த இரு திட்டங்களையும் இணைத்து செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, அனைத்து மாநில அரசுகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில், இரு திட்ட இயக்குனரகங் களும் இணைக்கப்பட்டு, ஒரே திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இரு திட்டங்களின் இணைப்பை தொடர்ந்து, மாநிலம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் விபரங்களை திரட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக