ஞாயிறு, 17 ஜூன், 2018

கூகுள் மேப்பில்~புது வசதி…


கூகுள் மேப்பில் தற்போது புதிய வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

மக்கள் வெளியில் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் யாரிடமாவது வழி கேட்டு செல்வதெல்லாம் பழைய ஸ்டைல். தற்போது அந்த வேலையை கூகுள் மேப்பே இலகுவாக செய்து வருகிறது.தற்போதுள்ள கூகுள் மேப்பில் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் எனப் பதிவிட்டால் மட்டுமே போதும், அந்தப் பகுதிகளை இணையம் மூலம் இந்தச் செயலி சரியாகக் காட்டிவிடும். இதனால் யாரிடமும் நின்று வழி கேட்டு நேரத்தை வீணடிக்காமல், செல்லவேண்டிய இடத்திற்குச் சரியாகச் செல்லமுடிகிற வசதிகளை கூகுள் மேப் தருகிறது.

இந்த வசதியை மேம்படுத்தும் வகையில் கூகுள் மேப், சார்ட்கட்ஸ் வசதிகளை படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக பயனாளர்களே எடிட் செய்யும் வசதி, பயனர் பதிவு செய்யும் இடத்திற்கு அருகிலுள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவற்றை தானாகவே காட்டும் வசதி ஆகியவற்றை வழங்கியது இதில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதில் புதிய ஒரு வசதியாக குயிக் ஆப்ஷன் எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் மேப். இதனால் இனி மேப்பில் ஒரு இடத்தை தேடுவதானது இன்னும் எளிமையாகிறது. இவ்வசதியால் ஒரே நேரத்தில் ஹோம் பட்டன் மற்றும் ப்ரீஃகேஸ் குறிப்புகளை பயன்படுத்த முடியும். இது அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் இல்லைதான் என்றாலும் மேப்பை பயன்படுத்துகிறவர்களுக்கு அவசர நேரத்தில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக