ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

யுபிஎஸ்சி 2019 தேர்வுகளுக்கான அட்டவனை வெளியீடு...


2019 ஆம் ஆண்டு எந்தெந்த அரசுப் பணிகளுக்கு எப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)  வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகள் யுபிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் எந்த மத்திய அரசு பணிகளுக்கு எந்தெந்த போட்டித் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற விவரங்களுடன் கூடிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை யுபிஎஸ்சி வருடந்தோறும் வெளியிடுவது வழக்கம்.

இந்த அட்டவணையில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது அறிவிக்கப்படும், விண்ணப்பிப்பதற்கான காலக் கெடு, தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இந்த அட்டவணையை யுபிஎஸ்சி இணையதளத்தில் (upsc.gov.in) தெரிந்துகொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக