ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒரு வாரத்தில் அதற்கான விழிப்புணர்வு பணிகள் தொடங்கப்படும்.
மேலும் பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கான கையேடும் வழங்கப்படும். மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம் 320 பள்ளிகளுக்கு முதல்கட்டமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.
ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு செய்யப்படும். விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.